இந்திய கிரிக்கெட் அணி 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தோல்விக்கு பின்னர், இந்திய அணி டி20 கிரிக்கெட்டில் புதிய ட்ரெண்ட் செட்டை உருவாக்கியது என்று இங்கிலாந்து அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் பில் சால்ட் தெரிவித்து இருக்கிறார்.
2022 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பையில் ரோகித் சர்மா கேப்டனாக பொறுப்பேற்று இந்திய அணி உலக கோப்பையை வெல்ல காரணமாக இருப்பார் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் அரை இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிராக தோல்வி அடைந்து பல விமர்சனங்களை எதிர்கொண்டது. அந்த நிலையில் இருந்து ரோஹித் சர்மா அதிரடி ஆட்டத்தை ஆரம்பித்து எந்த அணியாக இருந்தாலும் அதை அடித்து நொறுக்க வேண்டும் என்கிற ட்ரெண்ட் செட்டை உருவாக்கினார்.
அதனால்தான் 2024ம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை கைப்பற்ற முடித்ததாக பில் சால்ட் கருதுகிறார். இது குறித்து அவர் கூறும் போது “டி20 கிரிக்கெட்டில் புதிய டிரெண்ட் செட்டராக நாங்கள் இருந்தோம். ஆனால் 2024ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் இந்திய அணி எங்களை வீழ்த்தியது. அதற்கு முன்னர் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் எங்களிடம் தோல்வி அடைந்த பிறகு ரோகித் சர்மா எதிரணிகளை அடித்து துவம்சம் செய்யும் புதிய கொள்கையை கடைப்பிடித்தார். அதன் பலனாகவே இந்தியா இரண்டு உலகக் கோப்பைகளை அறுவடை செய்தது. எனவே நாங்கள் முன்னேறி வரும் நாள் வெகு தொலைவில் இல்லை” என்று அவர் தெரிவித்து இருக்கிறார்.

