நான் பண்ணினது ரொம்ப பெரிய தப்புனு ஒத்துக்கிறேன்.. எங்க தோல்விக்கு நான் தான் காரணம் – ஹாரி புரூக் ஒப்புதல்

நேற்று டி20 உலக கோப்பை தொடரின் இரண்டாவது செமி பைனலில் இங்கிலாந்து அணி சிறப்பாக போராடி கடைசியில் இந்திய அணியிடம் 7 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்த தோல்வி குறித்து இங்கிலாந்து அணியின் கேப்டன் ஹாரி புரூக் பேசியிருக்கிறார்.

- Advertisement -

இந்த போட்டியில் இந்திய அணி டாஸ் இழந்து முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 253 ரன்கள் குவித்தது. தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்தும் விட்டுக் கொடுக்காமல் போராடி இறுதியில் 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 246 ரன்கள் எடுத்தது. கடைசிவரை சென்ற இந்த போட்டியில் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வென்று இறுதி போட்டிக்கு முன்னேறியது.

- Advertisement -

இதுகுறித்து ஹாரி புரூக் கூறும்பொழுது “ஆடுகளம் புதிதாக இருப்பதால் பந்து நின்று வரும் கொஞ்சம் திரும்பும் என்று நாங்கள் எதிர்பார்த்தோம். ஆனால் அப்படி நடக்கவில்லை. உலகத்தில் சிறந்தவர்களான இந்திய பேட்ஸ்மேன் களிடம் சிறிய தவறு செய்தாலும் பந்து வெளியில் போய்விடும். மேலும் 250 ரன்களை துரத்தும் பொழுது மற்ற அணிகள் நிலை குலைந்து போய் இருக்கலாம். ஆனால் எங்கள் வீரர்கள் போராடிய விதம் குறித்து பெருமைப்பட வேண்டும்

- Advertisement -

“நேர்மையாக சொல்வது என்றால் நான் பெரிய தவறு செய்து விட்டேன் என்று ஒப்புக்கொள்கிறேன். நான் சஞ்சு சாம்சன் கேட்சை தவறவிட்டு தப்பு செய்துவிட்டேன். அது ஆட்டத்தை எங்களிடம் இருந்து எடுத்துச் செல்லும் அளவுக்கு மோசமானதாக மாறிவிட்டது. எங்கள் பக்கத்தில் பீல்டிங் சரியாக அமையாதது தோல்விக்கு முக்கிய காரணம்” என்று கூறி இருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles