கடந்த சில தினங்களுக்கு முன்பாக நடைபெற்ற இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஆஸஷ் நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தொடங்கிய இரண்டு நாட்களுக்குள்ளேயே முடிவடைந்தது. முற்றிலும் பந்து வீச்சுக்கு சாதகமான இந்த ஆடுகளத்தில் வெறும் இரண்டு நாட்களுக்குள் போட்டி முடிவடைந்ததால் இது பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளாகி இருக்கிறது.
ஆஸ்திரேலியாவின் மெல்போன் கிரிக்கெட் மைதானம் பவுலர்களுக்கு சாதகமான ஒரு மைதானம் ஆகும். ஏற்கனவே ஆஸ்திரேலியா அணி டெஸ்ட் தொடரை கைப்பற்றி விட்டதால் நான்காவது கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. வெறும் இரண்டே நாட்களில் 36 விக்கெட் வீழ்ந்த நிலையில் இங்கிலாந்து அணி இறுதியாக நான்கு விக்கெட் வித்தியாசத்தில் 16 ஆண்டுகளுக்கு பிறகு வெற்றி பெற்றது.
இந்த சூழ்நிலையில் இது குறித்து இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் கூறும்போது ” இந்த டெஸ்ட் போட்டியானது ஆஸ்திரேலியாவில் இல்லாமல் வேறு எங்காவது குறிப்பாக ஆசிய நாடுகளில் நடந்திருந்தால் இந்நேரம் பெரிய பிரச்சனை வெடித்திருக்கும். முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பெரிய அளவில் விமர்சனங்களை முன் வைத்திருப்பார்கள்” என்று கூறி இருக்கிறார்.

