தோனியை கழட்டி விடும் சிஎஸ்கே.? ஐபிஎல் புதிய விதியால் சிஎஸ்கேவுக்கு நேர்ந்த சோகம்.. முழு விபரம்

சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இறுதிப்போட்டியில் சன்ரைசர்ஸ் அணியை வீழ்த்தி மூன்றாவது முறையாக சாம்பியன் கோப்பையை கைப்பற்றி அசத்தியிருக்கிறது.

- Advertisement -

இதில் முன்னாள் சாம்பியன் ஆன சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த முறை 7 போட்டிகளில் வெற்றி பெற்று 7ல் தோல்வியடைந்து பிளே ஆப் சுற்றை விட்டு வெளியேறியது. தற்போது அடுத்த ஐபிஎல் சீசனுக்கான மெகா ஆக்சன் இந்த வருட இறுதியில் நடைபெற உள்ளதால் தற்போது வெளிவந்துள்ள புதிய ஐபிஎல் விதியின்படி மூன்று வீரர்களை தக்கவைத்துக் கொள்ளவும் ஒரு வீரரை ஆர்டிஎம் கார்டு மூலம் திரும்பப் பெற்றுக் கொள்ள முடியும்.

- Advertisement -

அப்படிப் பார்த்தால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மூன்று வீரர்களையும் ஒரு வீரரை ஆர் டி எம் கார்டு மூலம் பயன்படுத்திக் கொள்ளலாம். அந்த மூன்று வீரர்களில் கேப்டன் ருத்ராஜ், ரவீந்திர ஜடேஜா மற்றும் பத்திரனா ஆகிய வீரர்கள் நிச்சயமாக இருப்பார்கள். மற்றொரு வீரராக சிவம் துபேவை ஆர் டி எம் கார்டு மூலமாக பயன்படுத்தி எடுத்துக்கொள்ளலாம்.

- Advertisement -

இந்த மூன்று வீரர்களில் ஏதேனும் ஒரு வீரரை விட்டால் நிச்சயம் சிஎஸ்கே அணிக்கு அது பெரிய பிரச்சனையாகி விடும். எப்படியும் இந்த மூன்று வீரர்களும் மிகப் பெரிய தொகைக்கு ஏலம் போவார்கள். இதனால் அவர்களை அதிக ஏலத்தில் வாங்குவது மற்ற வீரர்களை வாங்குவதில் சிக்கல் ஏற்படும். இதனால் இந்த மூவரையும் சிவம் தூபே ஐ ஆர்டிஎம் கார்டு மூலமாகவும் பயன்படுத்திக்கொள்ளும்.

இந்த சூழ்நிலையால் மகேந்திர சிங் தோனி அடுத்த சீசனில் விளையாடினால் சென்னை அணியை விட்டு வெளியேற வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. ஏனெனில் தோனிக்கு தற்போது 42 வயதாகி வருவதால் அவருக்கு தற்போது சம்பளமாக 15 கோடி வழங்கப்படுகிறது. இதனால் அடுத்த சீசனில் விளையாடுவாரா? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. அப்படி அவருக்கு மிகப்பெரிய தொகை கொடுத்து சென்னை அணி வாங்கினால் அதற்கு அடுத்த சீசன்களில் விளையாடுவாரா? என்ற சந்தேகமும் நிலவுகிறது.

- Advertisement -

இதனால் தோனியை டெல்லி அல்லது பஞ்சாப் இந்த இரண்டு அணிகள் வாங்க முயற்சிக்கும். ஏனெனில் இந்த இரண்டு அணிகளும் இன்னும் ஒரு முறை கூட ஐபிஎல் கோப்பையை வெல்லாததால் இந்த முறை தோனியை வாங்கி தங்களது கனவை நிறைவேற்ற முயற்சிக்கும். ஆனால் இவை அனைத்தும் மகேந்திர சிங் தோனி அடுத்த சீசனில் விளையாடினால் மட்டுமே இதுவெல்லாம் சாத்தியமாகும்.

இதையும் படிங்க:அதை நினைத்தால் அழுத்தம்தான் ஏற்படும்.. நமக்கு பின்னால் ரசிகர்கள் இருக்கிறார்கள்.. டி20 உலக கோப்பை குறித்து விராட் கோலி கருத்து

ஆனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பிராண்ட் வீரரான மகேந்திர சிங் தோனியை சென்னை அணி அவ்வளவு எளிதில் விட்டுக் கொடுக்காது. எப்படியும் அதிக தொகை செலவழித்தாவது அடுத்த சீசனில் எடுக்க முயற்சிக்கும். அதற்கு அடுத்த சீசனில் தோனி ஓய்வு பெற்றால் அதற்குத் தகுந்தவாறு மாற்று வீரரையும் முன்பே எடுத்து வைக்கும் என கிரிக்கெட் வல்லுனர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles