இதுதான் கேகேஆர் கோட்டாவா.. சிஎஸ்கே வீரரை வீட்டிற்கு அனுப்பிய கம்பீர்.. ஹர்சித் ராணாவுக்கு அடித்த அதிர்ஷ்டம்

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நாளை மறுநாள் லீட்ஸ் மைதானத்தில் தொடங்க உள்ளது. இந்திய அணி பயிற்சிப் போட்டிகளில் விளையாடிவிட்ட நிலையில், இந்திய ஏ அணியின் வீரர்கள் அனைவரும் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். ஆனால் ஹர்சித் ராணா மட்டுமே இந்திய அணியில் சேர்க்கப்பட்டிருக்கிறார்.

- Advertisement -

இதற்கு இந்திய ரசிகர்களிடையே கடுமையான எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. ஏனென்றால் ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரிலேயே ஹர்சித் ராணா 2 போட்டிகளுடன் ஓரம்கட்டப்பட்டார். அதேபோல் ஹர்சித் ராணாவுக்கு அனுபவமும் குறைவு என்பதால், சீனியர் வீரர்களுக்கு இணையாக பவுலிங் செய்ய அதிக கிரிக்கெட் அனுபவம் தேவையாக இருந்தது.

- Advertisement -

கம்பீர் எடுத்த முடிவு

அதேபோல் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் டி20 கிரிக்கெட்டை போல் ஸ்லோ பந்துகளை வீசி அதிர்ச்சியை கொடுத்தார். இதனால் ரஞ்சி டிராபியில் சிறப்பாக செயல்பட்டு வந்த அன்சுல் கம்போஜை இந்திய அணியில் சேர்க்க வேண்டும் என்ற குரல்கள் எழுந்தன. அதற்கேற்ப இந்திய ஏ அணிக்காக ஆடிய அன்சுல் கம்போக் மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

- Advertisement -

புதிய பந்து, பழைய பந்து என்று இரண்டிலும் அன்சுல் கம்போஜ் 2 போட்டிகளில் விளையாடி 5 விக்கெட்டுகளையும், ஒரு அரைசதத்தை விளாசினார். ஆனால் ஹர்சித் ராணா ஒரேயொரு போட்டியில் விளையாடி 1 விக்கெட்டை மட்டுமே வீழ்த்தினார். இருந்தாலும் இந்திய அணியின் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் ஹர்சித் ராணாவை மட்டுமே இந்திய அணியில் சேர்த்திருக்கிறார்.

கேகேஆர் கோட்டா

இதனால் கம்பீர் கம்பீர் ஒருதலைபட்சமாக செயல்படுவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. கேகேஆர் அணிக்காக ஆடியதால் மட்டுமே ஹர்சித் ராணாவுக்கு கம்பீர் வாய்ப்பு அளிப்பதாகவும், சிஎஸ்கே அணிக்காக விளையாடுவதால் அன்சுல் கம்போஜை கம்பீர் புறக்கணிப்பதாகவும் ரசிகர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

- Advertisement -

இதுதொடர்பாக முன்னாள் வீரர் டோடா கணேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில், இந்திய அணியில் அன்சுல் கம்போஜ் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் கம்பீருக்கு அப்படிதான் என்ன தான் ஹர்சித் ராணா மீது அன்பு என்று புரியவில்லை என்று பதிவிட்டுள்ளார். இதனால் கேகேஆர் கோட்டாவில் ஹர்சித் ராணா சேர்க்கப்பட்டிருப்பதாக கொந்தளித்து வருகின்றனர்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles