சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று நடைபெற உள்ள கடைசி லீக் ஆட்டத்தில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாட இருக்கின்றன.
இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் முதல் அரை இறுதி போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் விளையாட வேண்டும் என்று தனது விருப்பத்தை தெரிவித்திருக்கிறார்.
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் ஒரு பிரிவில் தென் ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் முதல் இரண்டு இடங்களை பிடித்து அரை இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. மற்றொரு பிரிவில் இருக்கும் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இன்று நடைபெற உள்ள கடைசி லீக் ஆட்டத்தில் விளையாட உள்ளன. இதில் எந்த அணி வெற்றி பெறுகிறதோ அந்த அணி மற்றொரு பிரிவில் இருக்கும் ஆஸ்திரேலியா அணியுடன் அரை இறுதி போட்டியில் விளையாடும்.
தோல்வியடையும் அணி தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக அரை இறுதி போட்டியில் விளையாடும் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இந்திய அணி இந்த போட்டியிலும் வெற்றி பெற்று அரை இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக வெற்றி பெற வேண்டும் என்கிற திட்டத்தோடு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் தான் நான் விளையாட வேண்டும் எனவும் சிறு வயதில் இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் முதன் சுற்றிலேயே வெளியேறிவிடும் என்று கூறினால் நான் நம்பி இருக்க மாட்டேன் எனவும் சில கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்.
இது குறித்த தினேஷ் கார்த்திக் விரிவாக கூறும்போது ” தற்போது இருக்கும் இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் மிக சிறப்பான முறையில் விளையாடிகொண்டு வருகிறது. இருப்பினும் அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியோடு விளையாட வேண்டும் என்பதைத்தான் நானும் விரும்புகிறேன். இதில் இந்திய அணி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேற வேண்டும் என்பதே எனது ஆசையாகும்.
இதையும் படிங்க:நான் சும்மா ஒன்னும் வங்கதேச டீமுக்கு ஃபீல்டிங் செட் செய்யல.. காரணம் அந்த இந்திய வீரர் சொன்ன விஷயம் – ரிஷப் பண்ட் விளக்கம்
நான் இளமையாக இருந்தபோது தொடரின் ஆரம்பத்திலேயே பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறாமல் முதல் சுற்றிலேயே வெளியேறிவிடும் என்று என்னிடம் யாராவது கூறினால் நான் அதை நம்பி இருக்க மாட்டேன். ஏனென்றால் இந்த இரண்டு அணிகளும் எவ்வளவு வலிமையாக இருக்கிறது என்று எனக்கு நன்றாகவே தெரியும். தற்போது அந்த அணிகள் ஆரம்பத்திலேயே வெளியேறி இருப்பது எனக்கு ஏமாற்றத்தை கொடுக்கிறது” என்று தினேஷ் கார்த்திக் பேசி இருக்கிறார்.

