சூர்யா நான் சொல்றத கேளுங்க.. இங்கிலாந்த செமி பைனலில் பொட்டலம் கட்டலாம்.. இத செஞ்சா போதும் – தினேஷ் கார்த்திக் அறிவுரை

நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் நாளை மறுநாள் இந்திய அணி இங்கிலாந்து அணிக்கு எதிராக மும்பை வான்கடே மைதானத்தில் மோத இருக்கிறது. கடந்த டி20 உலகக் கோப்பை தொடரில் செமி பைனலில் இந்திய அணி இங்கிலாந்து அணியை வென்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இதற்கு பதிலடி கொடுப்பதற்கு இங்கிலாந்து அணி முழு மூச்சில் தயாராகும் என்பதால் இந்திய அணி மிகவும் கவனமாக இருக்க வேண்டிய அவசியம் உள்ளது.

- Advertisement -

இந்த நிலையில் இந்திய அணி எப்படியான பந்துவீச்சு திட்டங்களை கொண்டு வந்தால் இங்கிலாந்து அணியை மறக்க முடியும் என இந்திய முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் அறிவுரை கூறியிருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து அவர் பேசும் பொழுது “இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் மிகவும் சிரமப்பட்டு இடம் எடுத்து வருகிறார்கள். இப்போதைக்கு அவர்கள் அணியில் சிறப்பான பேட்ஸ்மேன் கேப்டன் ஹாரி புரூக் மட்டுமே. எனவே இதன் காரணமாக பந்து வீச்சுக்கு உம்ராவை கொஞ்சம் தாமதமாக கொண்டு வர வேண்டும். சால்ட் மற்றும் பட்லருக்கு, அர்ஸ்தீப் மற்றும் ஹர்திக் பாண்டியா இருவரும் போதுமானவர்களாக இருப்பார்கள்”

- Advertisement -

“இங்கிலாந்து கேப்டன் பேட்டிங் செய்ய வந்ததும் உடனடியாக நாம் பும்ரா மற்றும் வருண் சக்கரவர்த்தி இருவரையும் வைத்து அவரை சீக்கிரத்தில் ஆட்டம் இழக்க வைக்க வேண்டும். அப்படி செய்துவிட்டால் இங்கிலாந்து அணியை எளிதாக நம்மால் கட்டுப்படுத்தி விட முடியும். எனவே இந்த திட்டத்தை இந்திய அணி எடுத்துக் கொண்டு வர வேண்டும்” எனக் கூறியிருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles