இன்னும் 3 ஆண்டுகள் என்னால் கிரிக்கெட் விளையாட முடியும்.. ஆனால் நான் ஓய்வு தெரிவிக்க காரணமே இதுதான்.. கூறுகிறார் தினேஷ் கார்த்திக்

நடந்து முடிந்த ஐபிஎல் தொடரோடு இந்திய வீரரும், தமிழக கிரிக்கெட் வீரருமான தினேஷ் கார்த்திக் கிரிக்கெட்டில் இருந்து தனது ஓய்வு அறிவித்திருக்கிறார்.

- Advertisement -

இன்னும் விளையாட உடற்தகுதி இருப்பினும், தான் விரைவாக ஓய்வு அறிவித்ததற்கான காரணத்தையும் விளக்கி இருக்கிறார். தற்போது டி20 உலக கோப்பை கிரிக்கெட்டில் வர்ணனையாக செயல்பட உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்திய கிரிக்கெட் வீரரான தினேஷ் கார்த்திக் சமீபத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் இடம் பெற்று விளையாடி வந்தார். பெங்களூர் அணி இந்த முறையாவது ஐபிஎல் கோப்பையை கைப்பற்றும் என்று எதிர்பார்த்த நிலையில், எதிர்பாராதவிதமாக பிளே ஆப் சுற்றோடு வெளியேறியது. இதனால் இந்த முறையும் கோப்பையை கைப்பற்றாமலே பெங்களூர் அணி வெளியேறியதை தொடர்ந்து அந்த அணியில் விளையாடி வந்த தினேஷ் கார்த்திக் தனது ஓய்வை அறிவித்திருக்கிறார்.

- Advertisement -

இந்த ஆண்டோடு கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று விடுவேன் என்று ஏற்கனவே தினேஷ் கார்த்திக் அறிவித்திருந்த நிலையில், அவருக்கு ஐபிஎல் கோப்பையை வென்று கொடுத்து பிரியா விடை கொடுக்க வேண்டும் என்று பெங்களூர் அணி வீரர்கள் நினைத்திருந்தனர். அதற்கு தகுந்தவாறு கடைசி ஆறு போட்டிகளிலும் வெற்றி பெற்று ப்ளே ஆப் சுற்றும் ஐபிஎல் தொடரில் முன்னேறினர்.

ஐபிஎல் பிளே ஆப் சுற்றில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூர் அணி தோல்வி அடைந்தது. இதனால் கோப்பையை கைப்பற்றும் கனவில் இருந்த பெங்களூரு அணி வீரர்களுக்கு இது ஏமாற்றமாகவே அமைந்திருந்தது என்றுதான் கூற வேண்டும். இன்னும் மூன்று சீசன்கள் விளையாட உடல் தகுதி இருந்தும் ஓய்வு பெற்றது குறித்து கூறும் தினேஷ் கார்த்திக் மனதில் ஏற்பட்ட மாற்றமே தன்னை ஓய்வு பெற வைத்ததாக கூறியிருக்கிறார்.

- Advertisement -

இது குறித்து தினேஷ் கார்த்திக் கூறும் பொழுது
“நான் இன்னும் மூன்று ஆண்டுகள் ஐபிஎல் தொடர் விளையாட உடல் தகுதியுடன் இருக்கிறேன். ஆனால் மனதளவில் எனக்கு ஏற்பட்ட மாற்றமே என்னை ஓய்வெடுக்க தூண்டியது. மேலும் என் வாழ்க்கையில் எனக்கு அதிக பிரச்சனைகள் என்று எதுவும் இல்லை. நான் எதை செய்ய விரும்புகிறேனோ அதை 100% அர்ப்பணிப்புடன் கொடுக்க முயற்சி செய்கிறேன்.

இதையும் படிங்க:இந்த தப்பை மட்டும் தயவு செய்து பண்ணவே பண்ணிராதீங்க.. ரசிகர்களுக்கு சச்சின் டெண்டுல்கர் வேண்டுகோள்

மேலும் எனது குடும்பத்துடன் நேரத்தை செலவிடவும் விரும்புகிறேன் அதனால் நான் இந்த முடிவை எடுத்துள்ளேன்” என்று கூறியிருக்கிறார். வரவுள்ள உலகக் கோப்பையில் தினேஷ் கார்த்திக் வர்ணனையாளராகவும் செயல்பட இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தினேஷ் கார்த்திக் வர்ணனையாளர் குழுவில் ஆடுகளத்தின் தன்மை மற்றும் மைதான சூழல் குறித்து கூறும் குழுவில் இடம் பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரைத் தவிர இன்னும் பல முன்னாள் இந்திய வீரர்கள் வர்ணனையாளர் குழுவில் இடம் பெற்று இருக்கின்றனர்

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles