விராட் கோலி விமர்சனங்களால் உருவாகிறார்.. அதுவே அவரை சாதிக்க தூண்டுகிறது.. ஆர்சிபி வீரர் தினேஷ் கார்த்திக் பேட்டி

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணிக்கு ஒரு சிறப்பான ஆண்டாக அமைந்திருக்கிறது என்று சொல்ல வேண்டும். அந்த அளவிற்கு தொடக்கத்தில் தொடர்ந்து போட்டிகளில் தோல்வியை தழுவினாலும், அதற்குப் பிறகு சிறப்பாக செயல்பட்டு பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி நூல் இழையில் வெற்றியை தவற விட்டது.

- Advertisement -

அதற்கு மிக முக்கிய காரணம் விராட் கோலியின் பேட்டி மற்றும் அவரது அணுகுமுறை.இந்த சீசன் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னதாக விராட் கோலியின் பேட்டிங் ஸ்டிரைக் ரேட் குறித்து அதிகம் பேசப்பட்டது. மெதுவாக விளையாடுகிறார் இவரை டி20 உலக கோப்பைக்கு தேர்வு செய்யக்கூடாது என்பது போன்ற விமர்சனங்களும் வந்தன.

- Advertisement -

ஆனால் அனைத்திற்கும் விராட் கோலி தனது பேட்டிங் மூலமாக பதிலடி கொடுத்தார். குறிப்பாக ஐபிஎல் தொடரின் வர்ணனையாளர் ஆன நியூசிலாந்தை சேர்ந்த சைமன் டவுல் விராட் கோலியின் பேட்டிங் ஸ்ட்ரைக் ரேட் குறித்து அதிகமாக விமர்சித்து இருந்தார். இதனால் விராட் கோலி எப்போதும் இல்லாத அளவுக்கு 155 ஸ்ட்ரைக் கேட்டில் 741 ரன்கள் குவித்து அனைத்திற்கும் பதிலடி கொடுத்தார்.

- Advertisement -

அதுமட்டுமில்லாமல் இந்த ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் குவித்ததற்கான ஆரஞ்சு தொப்பியையும் வென்றிருக்கிறார். இதுகுறித்து தற்போது ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெற்றிருக்கும் ஆர்சிபி வீரர் தினேஷ் கார்த்திக் கூறும் பொழுது
“இந்த ஆண்டு விராட் கோலியின் செயல்பாடுகள் குறித்து என்னால் ஒரு புத்தகமே எழுத முடியும். அந்த அளவுக்கு இந்த சீசனை மிகச் சிறப்பாக விளையாடி இருக்கிறார். அவரை விமர்சனம் செய்த சைமன் டவுல் போன்றோருக்கு நன்றி.

ஏனெனில் விராட் கோலி விமர்சனங்களால் உருவாகிறார். விராட் கோலியை உண்மையாக தூண்டி விட்டார்கள் என்று தான் சொல்ல வேண்டும். அவர் இது போன்ற விமர்சனங்களை தற்காலிகமாக எடுத்துக்கொண்டு அதையே ஒரு உந்து சக்தியாக பயன்படுத்துகிறார். தன் மீது வரும் விமர்சனங்களை கருத்தில் கொண்டு அதை தவறு என்று நிரூபிப்பதில் விராட் கோலி அதிக ஆர்வம் உடையவர்.

- Advertisement -

அதை அவர் வெளியே சொல்லாவிட்டாலும் இது போன்ற விஷயங்கள் அவருக்கு ஆர்வத்தை தூண்டும். இந்த மாதிரி சூழ்நிலைகளில் அவர் ஒரு எரிமலை குழம்பு மாதிரி. எந்த ஒரு விஷயமும் அவரை தடுத்து நிறுத்த முடியாது. இந்த ஆண்டு பெங்களூரு அணியின் வெற்றிகள் குறித்து நிறைய பேசப்படலாம்.

இதையும் படிங்க:எனது சம்பளம் குறித்து நிறைய கேலிப் பேச்சுகள் இருந்தது.. இறுதிப் போட்டியில் ஆட்டநாயகன் விருது வென்ற கொல்கத்தா அணி வீரர் ஸ்டார்க் பேட்டி

ஆனால் விராட் கோலி என்ற தனி மனிதர் இல்லாமல் இது எதுவுமே சாத்தியம் கிடையாது. பேட்டிங்கை மட்டும் கூறவில்லை. களத்தில் அவர் இருக்கும் போது கொடுக்கக்கூடிய ஒரு மிரட்டலான உணர்வு. களத்தில் அவர் ஃபீல்டிங் செட் செய்யும் விதம். இவை எல்லாமே அபாரமானதாக இருக்கும். இப்படிப்பட்ட ஒரு வீரரை பெற்றதற்கு ஆர்சிபி ரசிகர்கள் என்றும் மரியாதையோடு இருக்க வேண்டும்” என்று தினேஷ் கார்த்திக் கூறியிருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles