அடி தூள்.. தினேஷ் கார்த்திக்கு அடித்த ஜாக்பாட்.. ஆர்சிபியில் இரண்டு முக்கிய பதவி.. புது அவதாரம் எடுக்க உள்ள டிகே

தமிழக கிரிக்கெட் வீரரும் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரருமான தினேஷ் கார்த்திக் இந்த ஐபிஎல் தொடரோடு பெங்களூர் அணியில் இருந்து ஓய்வு பெற்றார்.

- Advertisement -

தற்போது வெளிவந்துள்ள தகவலின் படி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் இரண்டு முக்கிய பதவிகளில் பொறுப்பேற்க இருக்கிறார். அடுத்த ஆண்டு முதல் பெங்களூர் அணிக்காக செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

கடந்த 2022ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக 5.50 கோடியால் வாங்கப்பட்டார். அந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடியதால், அவருக்கு டி20 உலக கோப்பை தொடரிலும் விளையாட வாய்ப்பு கிடைத்தது. மிடில் வரிசையில் களமிறங்கி சிறப்பாக விளையாடி பெங்களூர் அணிக்கு பல வெற்றிகளை பெற்றுக் கொடுத்தார். 2023ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரிலும் ஓரளவு சிறப்பான பங்களிப்பை வெளிப்படுத்தினார்.

- Advertisement -

இந்த ஆண்டும் அதே மிடில் வரிசையில் களமிறங்கி தனி ஆளாக நின்று பல போட்டிகளை வென்று கொடுத்திருக்கிறார். இந்த சூழ்நிலையில் இந்த ஐபிஎல் தொடரோடு தனது ஓய்வு அறிவித்த தினேஷ் கார்த்திக் தற்போது முடிந்த டி20 உலக கோப்பைத் தொடரிலும் வர்ணனையாளராக சிறப்பாக செயல்பட்டார். இந்த நிலையில் தற்போது இவருக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியிலிருந்து மிக இரண்டு முக்கிய பொறுப்புகளை இவருக்கு வழங்க முன் வந்துள்ளது.

தினேஷ் கார்த்திக் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு பேட்டிங் பயிற்சியாளராகவும் மற்றும் ஆலோசகராகவும் செயல்பட உள்ளார். ஏற்கனவே கொல்கத்தா அணிக்காக கேப்டன் பொறுப்பை ஏற்று சிறப்பாக செயல்பட்ட நிலையில், தற்போது பெங்களூர் அணிக்கு சிறந்த பேட்டிங் பயிற்சியை வழங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கு மெகா ஏலம் நடைபெற உள்ளதால், பெங்களூர் அணி ஒரு சில வீரர்களை தவிர்த்து மொத்த அணியையும் மாற்ற முயற்சிக்கும். இதனால் அனுபவம் மற்றும் புதிய பெங்களூர் அணி உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தாண்டு தக்க வைக்கும் வீரர்களின் பட்டியலில் விராட் கோலியை தவிர்த்து பெங்களூர் அணிக்காக தொடரின் இடையில் இந்த ஆண்டு களமிறங்கி சிறப்பாக விளையாடிய இங்கிலாந்து அணியின் அதிரடி ஆட்டக்காரர் வில் ஜாக்ஸ் தக்க வைக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க:ஓபனிங் எனக்கு செட் ஆகல.. நம்பர் 3ல களமிறங்கவானு கேட்டதுக்கு அவங்க.. உலகக்கோப்பை வென்ற பின்னர் விராட் கோலி பேட்டி

இதனால் புதிய பெங்களூர் அணி தினேஷ் கார்த்திக்கின் கைகளில் கிடைக்க உள்ளதால், ஒரு பேட்டிங் பயிற்சியாளராகவும் ஆலோசகராகவும் பெங்களூர் அணியை சிறப்பாக வழி நடத்தி, 17 வருடங்களாக ஐபிஎல் கோப்பையை வெல்ல முடியாத சோகத்திற்கும் அடுத்த ஆண்டு தினேஷ் கார்த்திக் முற்றுப்புள்ளி வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles