ரிங்கு சிங் குடுத்து வைத்தது அவ்வளவு தான்.. அவரை ஒதுக்கிவிட்டு இந்திய அணியின் புதிய 2 ஃபினிஷர்களை தேர்வு செய்த தினேஷ் கார்த்திக் !

2024 டி20 உலகக் கோப்பையை வென்ற கையோடு ரோஹித் & கோலி சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தனர். சூரியகுமார் யாதவ் தலைமையிலான இளம் இந்திய அணி உருவாகி வருகிறது. ஐ.பி.எல் தொடரின் மூலமாக எக்கச் சக்க வீரர்கள் குவிந்துக் கிடக்கின்றனர்.

- Advertisement -

வங்கதேச அணிக்கு எதிரான டி20ஐ தொடர் இன்று துவங்கியது. இந்தத் தொடர் முதல் இனி இந்திய அணியின் புதிய 2 ஃபினிஷனர்கள் குறித்து தினேஷ் கார்த்திக் பேசினார். அவர் ரிங்கு சிங்கை குறிப்பிடாமல் இருந்தது சற்று ஆச்சர்யத்தை உண்டாக்கியுள்ளது.

- Advertisement -

தினேஷ் கார்த்திக் கூறுயதாவது, ” இந்திய டி20ஐ அணியில் ஃபினிஷனர்களாக ஹர்திக் பாண்டியா மற்றும் ரியான் பராக் இருப்பார்கள். பாண்டியா ஏற்கனவே இந்திய அணியில் ஃபினிஷராக விளையாடி போட்டிகளை வென்றுள்ளார். என்னதான் அவர் ஐ.பி.எலில் டாப் ஆர்டரில் சென்று விளையாடினாலும் பிசிசிஐ அவரை ஃபினிஷனராகவே பயன்படுத்தும். “

- Advertisement -

” ஃபினிஷனராக அதிரடி காட்ட நல்ல வலிமையான பேட் வேகம் தேவை. அந்த வகையில் ரியான் பராக் நல்ல பலமான வீரர். பராக் மற்றும் பாண்டியா இருவரும் இந்திய அணிக்கு தரமான ஃபினிஷனர்களாக இருப்பார்கள். இவர்கள் இருவரும் ஆல்ரவுண்டர்கள் என்பது கூடுதல் பலம். ” என்றார் தினேஷ் கார்த்திக்.

இந்திய அணியில் தோனிக்கு அடுத்து பாண்டியா ஃபினிஷிங் பணியைச் செய்தார். அவருடன் துணையாக இடது கை பேட்ஸ்மேன் ரிங்கு சிங் இணைவார் என பல கிரிக்கெட் வல்லுனர்கள் எதிர்பார்த்தனர். உண்மையில் அந்தப் பணிக்கு ரிங்கு சிங் தான் மிகக் கச்சிதமாக இருப்பார். ஆனால் தினேஷ் கார்த்திக் அவரை ஒதுக்கிவிட்டு மற்ற 2 வீரர்களைத் தேர்வு செய்தது ஆச்சர்யத்தை உண்டாக்கியுள்ளது.

- Advertisement -

ரிங்கு சிங் கடந்த வருடம் முதலே இந்திய டி20ஐ அணியில் அறிமுகமானார். ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு எதிரான தொடர்களில் கிடைத்த அனைத்து வாய்ப்புகளிலும் அதிரடியாக செயல்பட்டார். 2024 டி20ஐ உலகக் கோப்பையில் நிச்சயம் அவர் இடம் பிடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பிசிசிஐ அவரை ரிசர்வ் வீரர்கள் பட்டியலில் தள்ளியது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles