நேற்று சிஎஸ்கே முதல் முறையாக தனிப்பட்ட நிகழ்ச்சிகளை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடத்தியது. இதில் கலந்துகொண்ட நடிகர் சிவகார்த்திகேயன் 60 வயது வரையில் தோனி விளையாட வேண்டும் என கேட்டுக்கொண்டார். இதற்கு தோனி அவருடைய பாணியில் பதிலளித்தார்.
இதுவரையில் சிஎஸ்கே அணி நிர்வாகம் ஐபிஎல் தொடருக்கு முன்பு பின்பு என எந்த விதமான நிகழ்ச்சிகளையும் நடத்தியது கிடையாது. ஆனால் நேற்று முதல் முறையாக முன்னாள் வீரர்களே அழைத்து மரியாதை அளித்து, கலை நிகழ்ச்சிகளையும் நடத்தியது.
இந்த நிகழ்வில் பேசிய நடிகர் சிவகார்த்திகேயன் ஒருமுறை ஓய்வு குறித்து டெபனன்ட்லி நாட் என்று சொல்லியது போல இனி எல்லா வருடமும் தாங்கள் சொல்ல வேண்டும், 60 வயது வரையில் ஐபிஎல் தொடரில் விளையாட வேண்டும் என தோனியை கேட்டுக்கொண்டார்.
இதற்கு பதில் அளித்த மகேந்திர சிங் தோனி “என்னால் அவ்வளவு காலம் எல்லாம் நிச்சயம் விளையாட முடியாது. ஏனென்றால் என்னுடைய பிட்னஸ் இறங்குமுகத்தில்தான் இருக்கிறது ஏறுமுகத்தில் கிடையாது. நான் என்னால் முடிந்த அளவுக்கு முயற்சி செய்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.

