வயசு வச்சு பேசாதீங்க.. இந்த 2 விஷயம் இருந்தா விராட் ரோகித் தாராளமா உலக கோப்பை ஆடலாம் – தோனி வெளிப்படை பேச்சு

இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவரும் 2027 ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் பங்கேற்று விளையாடலாமா? என்று மகேந்திர சிங் தோனியிடம் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கேள்வி முன் வைக்கப்பட்டது. இதற்கு பதில் அளித்து பேசி உள்ள மகேந்திர சிங் தோனி தன்னுடைய பாணியில் மிகச் சிறப்பான பதிலை கூறியிருக்கிறார்.

- Advertisement -

மகேந்திர சிங் தோனி இது குறித்து பேசும் பொழுது ” அவர்கள் ஏன் விளையாட கூடாது? இங்கு முக்கியமான விஷயம் என்னவென்றால் ஒரு வீரர் தொடர்ந்து விளையாட வேண்டுமா இல்லையா என்பதற்கு வயது ஒரு காரணமே கிடையாது. அவர் நல்ல செயல் திறனோடு நல்ல உடல் தகுதியோடு இருந்தால் அவர் தொடர்ந்து விளையாடுவதில் என்ன பிரச்சனை இருந்துவிட முடியும். தாராளமாக அவர்கள் இருவருமே விளையாடலாம்”

- Advertisement -

“நான் இந்திய அணிக்குள் வந்த பொழுது எனக்கு வயது 24. அப்பொழுது என் வயது குறித்து யாரும் என்னிடம் எதுவும் பேசவில்லை. இதே போல நான் தொடர்ந்து இந்திய அணிக்கு ஐந்து வருடமோ அல்லது பத்து வருடமோ விளையாடியிருந்தால், அப்பொழுதும் என்னிடம் வயது குறித்து யாரும் பேசக்கூடாது. ஒருவர் முப்பது வயதை தாண்டினால் அவர் விளையாட வேண்டுமா இல்லையா என்பதை அவர் தான் முடிவு செய்ய வேண்டும் நாம் முடிவு செய்யக்கூடாது. அவருக்கு ஆர்வமும் செயல் திறனும் உடன் தகுதியும் இருந்தால் விளையாடலாம்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles