தற்போது ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக விளையாடி வரும் டிவால்ட் பிரிவிஸ் ரவிச்சந்திரன் அஸ்வின் உடனான பேட்டியில் பல முக்கிய விஷயங்கள் குறித்து கூறியிருக்கிறார்.
நடப்பு ஐபிஎல் தொடரின் முதல் மூன்று போட்டிகளில் காயத்தின் காரணமாக அவர் விளையாடவில்லை. இந்த நிலையில் நாளை டெல்லி அணிக்கு எதிராக சொந்த மைதானத்தில் விளையாட இருக்கிறார்.
இந்த பேட்டியில் பேசிய டிவால்ட் பிரிவிஸ் “என்னுடைய ஐபிஎல் ஆரம்பத்தில் கேஎல்.ராகுல் ஒரு முக்கியமான அறிவுரை கூறினார். நீ எப்போதும் உனக்கு உண்மையாக இரு என்று சொன்னார். ஆனால் நான் அதைப் பின்பற்றாமல், உள்ளே சென்று என் இயல்பில் விளையாடாமல் போனேன்”
“எனக்கு சிஎஸ்கே அணிக்கு விளையாடுமாறு பிளமிங் அழைத்தது ஒரு வரம் போல அமைந்தது. சிஎஸ்கே என் வாழ்க்கையில் என்னை நல்ல நிலையில் வைத்துள்ளது” என்று கூறியிருக்கிறார்.

