இது என்ன சோதனை.. மும்பை எடுத்தும் சிஎஸ்கே பத்தி தீபக் சாஹர் பேசிய விஷயம்.. கடுப்பில் மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள்.. கொஞ்சம் ஓவராதான் போறாரோ.?

கடந்த நவம்பர் 24, 25ஆம் தேதிகளில் சவுதி அரேபியாவில் ஐ.பி.எல் மெகா ஏலம் நடைபெற்றது. இந்த ஏலத்தில் சிஎஸ்கே அணியால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தீபக் க்ஷாஹானின் பெயர் இரண்டாம் நாளில்தான் இடம்பெற்றது. அப்பொழுது சென்னையின் பணப் பையோ வெறும் 13 கோடி மட்டும்தான் இருந்தது.

- Advertisement -

இருப்பினும், சென்னை அணியானது அவருக்காக ரூ. 9 கோடி வரை ஏலம் எடுத்தது, ஆனால் கடைசியில் மும்பை அணியோ ரூ. 9.25 கோடிக்கு அவரே ஏலத்திலிருந்து வாங்கிக் கொண்டது. சென்னை அணியில் குறைந்த பணப்பை இருந்த போதிலும் தனக்காக இவ்வளவு தூரம் சென்றதை பார்த்து மனம் நெகிழ்ந்து உள்ளார், தீபக் சாஹர்.

- Advertisement -

எனக்காக முயற்சி செய்தார்கள்:

மேலும் அவர் ஸ்போர்ட் டாக் ஒன்றில் கூறியதாவது, “மஹி பாய்(தோனி) ஆரம்பக் கட்டத்தில் இருந்து எனக்கு உறுதுணையாக இருந்துள்ளார்; அதனால் தான் நான் சிஎஸ்கே அணிக்கு செல்ல விரும்பினேன். ஆனால் இரண்டாம் நாள் ஏலத்தில் என்னுடைய பெயர் வந்ததும், சிஎஸ்கே அணியில் செல்வது கடினம் என்ற நியாயமான எண்ணம் எனக்குள் வந்தது.

- Advertisement -

அவர்களிடம் குறைந்த பணப்பையாக 13 கோடி மட்டுமே இருந்தது ஆனாலும் அவர்கள் எனக்காக 9 கோடி வரை ஏலம் எடுத்தனர். அப்பொழுது எனக்குப் புரிந்து விட்டது, என்னை ஏலத்தில் சிஎஸ்கே அணி எடுப்பது என்பது மிகவும் கடினமான ஒன்றாகும். கடந்த ஆண்டு, என் பெயர் முதலில் வந்தது அதனால் சிஎஸ்கே அணி என்னை வாங்குவதற்கு எளிதாக இருந்தது” என்று தனது வருத்தத்தையும் மகிழ்ச்சியையும் ஒன்றாக பகிர்ந்துள்ளார், தீபக் சாஹர்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles