6 ஓவர் 100 ரன்.. சிஎஸ்கே என்னோட ஒரு ஸ்பெஷல் திறமைக்காக கண்டிப்பா எடுப்பாங்க.. அப்படி இல்லன்னா அந்த டீமுக்கு போயிடுவேன் – தீபக் சஹர் பேட்டி

ஐபிஎல் 2025-க்கு முன்னதாக மெகா ஏலமானது சவுதி அரேபியாவின் ஜெட்டாவில் நவம்பர் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் நடைபெற இருக்கிறது.

- Advertisement -

சிஎஸ்கே அணியானது ருதுராஜ் கெய்க்வாட், ரவீந்திர ஜடேஜா, மதீஷா பத்திரனா, சிவம் துபே, எம்.எஸ். தோனி ஆகிய ஐந்து வீரர்களே முன்னதாகவே தக்க வைத்துக் கொண்டது.

- Advertisement -

இந்நிலையில், சிஎஸ்கே அணி தன்னையும் மெகா ஏலத்தில் வாங்கும் என்ன.. முன்னாள் சிஎஸ்கே வீரரான தீபக் சாஹர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

- Advertisement -

என் மதிப்பு அதிகம், தீபக் சாஹர்:

சிஎஸ்கே-வின் முன்னாள் வீரரான தீபக் சாஹர் கூறுகையில், “கடந்த ஆண்டும், சிஎஸ்கே அணியால் தக்க வைக்கப்படும் வீரர்களின் பட்டியலில் நான் தேர்வு செய்யப்படவில்லை. ஆனாலும், அவர்கள் என்னை மீண்டும் மெகா ஏலத்தின் போது வாங்கி, சிஎஸ்கே அணியில் சேர்த்துக்கொண்டனர். இந்த வருடம் என்ன நடக்கப் போகிறது என்று என்னால் சொல்ல இயலவில்லை.

ஆனால், தற்போதைய t20-யை பொருத்தவரை பவர்ப்ளேயில் மட்டுமே 90-100 ரன்கள் எடுக்கப்படுகின்றன. அதனால் ஒவ்வொரு அணிகளும் 200-க்கும் அதிகமான ரன்களை அடிக்கவே முற்படுகின்றனர், எனவே எனது ‘திறமைக்கு இப்போது மதிப்பு அதிகம்’ என்று நான் அறிவேன்”

- Advertisement -

மேலும் அவர், “கடந்த ஆண்டுகளில் ஆட்டத்தின் முக்கிய நேரங்களில் ரன் ரேட்டைக் கட்டுப்படுத்துவதில் எனது திறமையை நிரூபித்துள்ளேன்” என்று டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிக்கை ஒன்றில் பேட்டி கொடுத்துள்ளார்.

கடந்த சீசனில், சாஹர் 8 ஆட்டங்களில் மட்டுமே விளையாடி, 40.40 சராசரியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles