பயத்த காட்டிட்டார்.. உலகில் நான் ஆடியதில் மிக கடினமான பவுலர்னா இவர்தான்.. டேவிட் வார்னர் நேர்மையான பதில்

ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாளை நடைபெற உள்ளது. இதற்கு முன்னதாக நடைபெற்ற இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியுள்ளது. ஆஸ்திரேலியா அணியின் டேவிட் வார்னர் தனது கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறார்.

- Advertisement -

டேவிட் வார்னர் தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையை 2009ஆம் ஆண்டு தொடங்கினார். அன்று ஆஸ்திரேலியா அணிக்காக தொடக்க வீரராகக் களம் இறங்கிய வார்னர் இன்று நட்சத்திர வீரர் பட்டியலில் இணைந்துள்ளார். டி20, ஒருநாள் போட்டி மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் ஆகிய மூன்று வடிவத்தொடரிலும் தனது சிறப்பான பங்களிப்பை அணிக்கு 100 சதவீதம் வழங்கக் கூடியவர்.

- Advertisement -

இவரது நிலையான தொடக்கம் பின்வரும் வீரர்களுக்கு எந்தவித அசவுகரியத்தையும் ஏற்படுத்தாமல் நிதானமாக நின்று விளையாட உதவுகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு பந்தை சேதப்படுத்திய விவகாரம் தொடர்பாக டேவிட் வார்னர் மற்றும் ஸ்டீவ் ஸ்மித்திற்கு ஆஸ்திரேலியா நிர்வாகம் போட்டிகளில் போட்டிகளில் விளையாட சிறிது காலம் தடை விதித்தது.

- Advertisement -

பின்னர் அதிலிருந்து மீண்டு வந்து மீண்டும் வெற்றிப்பாதைக்குத் திரும்பியுள்ளார். தொடக்க வீரரான இவர் பல நாட்டு பந்துவீச்சாளர்களின் வேகப்பந்து தாக்குதலை எதிர்கொண்டு விளையாடி உள்ளார். அதில் தான் எதிர்கொண்ட கடினமான வேகப்பந்து வீச்சாளர் குறித்த கேள்விக்கு 2016/17ல் நடைபெற்ற தென்னாப்பிரிக்கா டெஸ்ட் தொடரை நினைவு கூர்ந்தார்.

கிரிக்கெட்.காம் உடன் சமீபத்தில் பேட்டி கொடுத்த டேவிட் வார்னர் கிரிக்கெட் தொடர்பான சுவாரசியமான விஷயங்களைப் பகிர்ந்து கொண்டு உள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது
“நான் எதிர்கொண்ட பந்து வீச்சாளர்களில் கடினமானவர் என்றால் ஸ்டெயின்தான். 2016/17ல் தென்னாபிரிக்கா டெஸ்ட் தொடரின் போது நானும் ஷேன்மார்சும் 45 நிமிட இடைவெளியில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தோம். அப்போது மார்ஸ் என்னிடம் ஸ்டெய்னை எதிர்கொள்ள கடினமாக உள்ளது.

- Advertisement -

நாம் எவ்வாறு அவரை எதிர்கொள்ளப் போகிறோம் என்று எனக்குத் தெரியவில்லை என்று கூறினார். அதுபோல அவரை எதிர்கொள்ள கடினமாகவே இருந்தது. அந்த ஆட்டத்தில் மார்ஸ்க்கு தோள்பட்டை உடைந்தது என்று நினைக்கிறேன். ஸ்டெயின் ஒரு மிகக் கடுமையான போட்டியாளர். மைதானத்தில் பேட்ஸ்மேன்களுக்கு தங்களை ஆசுவாசப்படுத்திக் கொள்ள சிறிது இடைவெளி கூட தர மாட்டார். அவர் பந்தை இடது கையில் ஸ்விங் செய்வது மிட்சல் ஸ்டார்க் வலது கையில் ஸ்விங் செய்வது போல எனக்கு தோன்றியது” என்று கூறியிருக்கிறார்.

டேல் ஸ்டெயினின் பந்து வீச்சிற்க்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். ஸ்டெயின் தனது கிரிக்கெட் வாழ்க்கையில் 439 டெஸ்ட் விக்கெட்டுகள், ஒரு நாள் கிரிக்கெட்டில் 196 விக்கெட்டுகள் மற்றும் டி20 போட்டியில் 64 விக்கட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles