பாவம் எதிரிக்கு கூட இந்த நிலைமை வரக்கூடாது.. வாழ்த்து சொன்ன வந்த வார்னரை அசிங்கப்படுத்திய சன்ரைசர்ஸ் ஹைதரபாத்

ஐ.பி.எல் வரலாற்றிலேயே சிறந்த ஆஸ்திரேலிய வீரர்கள் பட்டியலை எடுத்துப் பார்த்தால் டேவிட் வார்னரின் பெயர் நிச்சயம் முதலில் இருக்கும். ஆனால் இன்று அவரையே ஏதோ சம்மந்தம் இல்லாதவன் போல மிகவும் அசிங்கப்படுத்தும் விதமாக சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணி நடத்துவது தெரிய வந்துள்ளது.

- Advertisement -

2024ஆம் ஆண்டிற்கான ஏலம் இன்று துபாயில் சிறப்பாக நடைபெற்று முடிந்துவிட்டது. வரலாற்றிலேயே முதல் முறையாக இரு வீரர்கள் 20 கோடியை தொட்டுள்ளனர். ஆஸ்திரேலிய வேகம் மிட்செல் ஸ்டார்க் 24.75 கோடிக்கு கொல்கத்தா மற்றும் பேட் கம்மின்ஸ் 20.5 கோடிக்கு ஹைதரபாத் அணிகளால் வாங்கப்பட்டுள்ளனர்.

- Advertisement -

உலகக் கோப்பை வென்ற ஆஸ்திரேலிய வீரர்கள் டிராவிஸ் ஹெட் மற்றும் பேட் கம்மின்ஸ் இருவரையும் ஹைதரபாத் அணி தான் வாங்கியுள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் உலகக் கோப்பை இறுதிப் போட்டிகளில் இந்தியாவுக்கு எதிராக அதிரடியான சதம் விளாசிய ஹெட் 6.8 கோடிக்கு விலை போயுள்ளார்.

- Advertisement -

இந்த இருவர்களையும் பாராட்ட இன்ஸ்டாகிராம் சென்ற டேவிட் வார்னருக்கு அதிர்ச்சித் தகவல் ஒன்று தெரியவந்துள்ளது. ஹைதரபாத் அணி இந்த இருவரையும் வாங்கிய பிறகு அவர்கள் பதிவிட்ட போட்டோவை டிராவிஸ் ஹெட் மற்றும் பேட் கம்மின்ஸ் தங்களது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்துள்ளனர். அதனைக் காண முயற்சியா செய்த போது அவை டேவிட் வார்னருக்கு காட்டவில்லை.

காரணம் ஹைதரபாத் அணி வார்னரை பிளாக் செய்துள்ளது. பின்னர் டிவிட்டர் சென்று பார்க்கையில் அங்கேயும் அவரை பிளாக் செய்துள்ளது சன்ரைசர்ஸ் ஹைதரபாத். இதனை ஸ்கிரீன்ஷாட் எடுத்து வார்னர் தன் ஸ்டரியில் பகிர்ந்து பின் இருவருக்கும் பாராட்டுகளை தெரிவித்தார். என்னதான் கருத்து வேறுபாடு காரணமாக அணியை விட்டு வெளியேறினாலும் இன்றுவரை ஹைதரபாத் அணியை இவர் இழிவாக பேசதியில்லை.

- Advertisement -

ஆனால் இவ்வளவு அணி இது போன்ற சில்லித் தனமான செயல்பாட்டை செய்திருப்பது மக்கள் மத்தியில் ஹைதரபாத் அணியின் மேல் வெறுப்பை உண்டாக்கியுள்ளது. 2014 ஆண்டு ஹைதரபாத் அணியில் சேர்ந்த வார்னர் 6 ஆண்டுகள் அயராது உழைத்து 2 ஆயிரம் ரன்கள் மேல் சேர்த்துள்ளார். 2021ஆம் ஆண்டு ஐ.பி.எலில் இவரை அணியில் கூட சேர்க்காமல் பாதியிலேயே ஹோட்டலில் விட்டுவிட்டு தனியாக ஆடியது. பின்னர் 2022ஆம் மெகா ஏலத்தில் விடுவிக்கப்பட்டார்.

ஹைதரபாத் அணிக்காக அவ்வளவு சப்போர்ட் செய்து அணித் தலைவராக 2016ஆம் ஆண்டு கோப்பையை வாங்கிக் கொடுத்தவர் வார்னர். மேலும் ஜாலியான மணிதரமான இவர் இவருக்கு இந்த நிலைமை என நினைக்கும் போது மிகவும் பரிதாபமாக உள்ளது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles