தோனிக்காக தண்ணி தூக்கவும் நான் ரெடி.. எனக்கு சம்பளமே தர வேணாம் ஆட மட்டும் வைங்க – தென் ஆப்பிரிக்க லெஜன்ட் டேல் ஸ்டெய்ன் பேட்டி

1983 ஆம் ஆண்டுக்குப் பிறகு பல வருடங்களாக உலககோப்பையையே இந்திய அணி கையில் ஏந்தாத நிலை இருந்தது. ஆனால் இந்திய அணிக்கு கேப்டனாகி முதல் டி20 உலகக்கோப்பை தொடரிலேயே, இந்திய அணிக்கு கோப்பையை வென்று கொடுத்தவர் தான் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி.

- Advertisement -

தோனி இப்பொழுது இந்தியன் பிரீமியர் லீக் தொடரில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். அவர் வழி நடத்துதலின் பேரில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது, பத்து முறை இறுதிப் போட்டிக்கும், ஐந்து முறை ( 2010 , 2011 , 2018 , 2021 மற்றும் 2023 ) வெற்றியும் பெற்றது. ஐபிஎல்-லில் ஐயாயிரம் ரன்களுக்கு மேல் எடுத்த சில பேட்ஸ்மேன்களில் தோனியும், முதல் விக்கெட் கீப்பர் என்ற பெருமையும் பெற்றுள்ளார்.

- Advertisement -

தோனி, இப்பொழுது அனைத்து விதமான சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்தும் ஓய்வு பெற்று விட்டார். தற்போது, ஐபிஎல் தொடரில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார்.

- Advertisement -

இந்த நிலையில், “எனது கிரிக்கெட் வாழ்க்கை முழுக்கவே நான் தோனியின் ரசிகனாகவே இருக்க விரும்புகிறேன்” என முன்னாள் தென்னாபிரிக்க வீரர் டேல் ஸ்டெய்ன் கூறியுள்ளார்.

தோனியின் ரசிகன் நான்:

முன்னாள் தென்னாபிரிக்க வீரரான டேல் ஸ்டெய்ன் கூறியதாவது, “நான் எம்எஸ் தோனியின் மிக பெரிய ரசிகன். ஏனென்றால், டோனி கேப்டனாக செயல்படும் பொழுது விக்கெட் கீப்பர் மற்றும் பவுலர்களின் இடையே அமைதியான சூழலில் அன்பான உறவும் நீடிக்கும். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பெறுவதற்காக நான் என்னுடைய சம்பளத்தை குறைத்துக் கொள்ளவும் தயாராக இருக்கிறேன். சென்னை அணியில் நான் ஒரு பகுதியாக இருந்தால், பெஞ்சில் உட்காரவும் தயாராக உள்ளேன்”.

- Advertisement -

“தோனி போன்ற ஒரு வீரருக்காக மீண்டும் விளையாட விரும்புகிறேன். யாரேனும் இன்று என்னை விளையாட சொன்னால் கூட நான் விளையாட தயார். என்னை ஒரு சிறந்த வீரராக தயார்படுத்திக் கொள்ள நான் அதை செய்வேன்” என்றும் கூறினார்.

வெற்றி பெறக்கூடிய அணி தான் வேண்டும்:

மேலும் அவர் கூறியதாவது, “ஐபிஎல் மற்றும் உலகக் கோப்பைகளை வெல்லக்கூடிய அணிகளுக்கு பயிற்சி அளிக்க விரும்புகிறேன். அதை சிறப்பாகச் செய்து முடித்த தோனியிடம் கற்றுக்கொண்டால் அது எனக்கு மிகவும் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன்”என்று கூறினார்.

2022 ஆம் ஆண்டு ஐபிஎல் -லின் போது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக, ஸ்டெய்ன் செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles