மகேந்திர சிங் தோனியின் சாதனையை தவறவிட்ட பேட் கம்மின்ஸ்.. வாய்ப்பு இருந்தும் கோட்டை விட்டார்.. அவ்வளவு சீக்கிரம் தொட முடியுமா.?

நேற்று நடந்து முடிந்த 17வது ஐபிஎல் இறுதிப்போட்டியில் கொல்கத்தா அணி சன் ரைசர்ஸ் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை மூன்றாவது முறையாக கைப்பற்றியது.

- Advertisement -

வெற்றிக்காக இரண்டு அணிகளுமே சரிசமமாக போராடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தொடக்கத்திலேயே சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி விக்கெட்டுகளை இழந்ததால் கொல்கத்தா அணியிடம் வீழ்ந்தது. சன்ரைசர்ஸ் அணியின் கேப்டன் கம்மின்ஸ் இந்த போட்டியில் வெற்றி பெறுவதன் மூலம் மகேந்திர சிங் தோனியின் சாதனையை சமன் செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது அதனைத் தவற விட்டுள்ளார்.

- Advertisement -

சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் பேட்டிங் சில சன்ரைசர்ஸ் அடுத்தடுத்து விரைவிலேயே விக்கெட்டுகளை இழந்ததால் 113 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. கொல்கத்தா அணியினர் இந்த போட்டியில் பந்து வீசி அனைவருமே விக்கெட் வீழ்த்தி இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

அதற்குப் பிறகு 114 ரன்கள் வெற்றி இலக்கை நோக்கி களம் இறங்கிய கொல்கத்தா அணிக்கு வெங்கடேஷ் ஐயர் மற்றும் குர்பாஸ் ஆகியோர் சிறப்பாக விளையாடி அணியை வெற்றி பெற வைத்தனர். குர்பாஸ் 39 ரன்கள், வெங்கடேஷ் ஐயர் 52 ரன்கள் குவித்தனர். இந்த வெற்றியின் மூலம் கொல்கத்தா அணி மூன்றாவது முறையாக சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது. ஏற்கனவே கொல்கத்தா அணி இரண்டு முறை கௌதம் கம்பீர் தலைமையில் ஐபிஎல் கோப்பையை 2012 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் வென்றது. அதற்குப் பிறகு கிட்டத்தட்ட 10 வருடங்கள் கழித்து 2024 ஆம் ஆண்டு ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையில் மீண்டும் ஐபிஎல் கோப்பையை வென்று அசத்தியிருக்கிறது.

வெற்றி பெற்ற அணிக்கு பரிசுத்தொகையாக 20 கோடியும் தோல்வி அடைந்த அணிக்கு 12.5 கோடியும் இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் வழங்கப்பட்டது. அதுமட்டுமில்லாமல் இந்த தொடரில் சிறப்பாக செயல்பட்ட வீரர்களுக்கு 12 முக்கிய விருதுகளும் வழங்கப்பட்டன. சன்ரைசர்ஸ் அணியின் கேப்டன் கம்மின்ஸ் இந்த போட்டியில் வெற்றி பெற்றிருந்தால் உலகக்கோப்பையை வென்ற கையோடு ஐபிஎல் கோப்பையையும் வென்ற கேப்டன் தோனியின் சாதனையை சமன் செய்திருப்பார்.

- Advertisement -

இதையும் படிங்க:ஐபிஎல் 2024ல் அறிவிக்கப்பட்ட 12 விருதுகள்.. சுனில் நரேனுக்கு மட்டும் இரண்டு விருதுகள்.. மொத்த பரிசுத்தொகை குறித்த முழு விபரம்

ஆனால் தோல்வியடைந்ததன் மூலமாக அந்த சாதனையை தற்போது தவற விட்டு இருக்கிறார். மகேந்திர சிங் தோனி 2011ம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பையை வென்றதோடு ஐபிஎல் கோப்பையும் அதே ஆண்டு வென்று வரலாறு படைத்தார். தற்போது வரை அந்த சாதனையை தோனி மட்டுமே வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில் சிஎஸ்கே ரசிகர்கள் தோனிதான் கெத்து என்ற ஹேஸ் டேக்கை சமூக வலைதளங்களில் வைரல் ஆக்கி வருகின்றனர்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles