இன்று சிஎஸ்கே தங்கள் சொந்த மைதானத்தில் லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி எட்டு விக்கெட் இழப்புக்கு 203 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரன் ஜோஸ் இங்லீஷ் 33 பந்துகளில் 85 ரன்கள் எடுத்தார்.ஜெமி ஓவர்டன் மூன்று விக்கெட் வீழ்த்தினார்.
இதைத்தொடர்ந்து விளையாடிய சிஎஸ்கே அணிக்கு உர்வில் பட்டேல் 13 பந்துகளில் அதிரடி அரை சதம் அடித்து 23 பந்துகளில் 65 ரன்கள் எடுத்தார். மேலும் ஐபிஎல் தொடரில் குறைந்த பந்தில் அரைசதம் அடித்த வீரராக ஜெய்ஸ்வால் சாதனையை சமன் செய்தார்.
சிஎஸ்கே அணி இறுதியாக நான்கு பந்துகளை மீதம் வைத்து இலக்கை எட்டி ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மீதம் இருக்கும் மூன்று போட்டியில் இரண்டு போட்டிகளை வென்றால் அந்த அணி பிளே ஆப் சுற்றுக்கு செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.

