ஐபிஎல் மினி மூலம் சிஎஸ்கே அணியின் பலம் பல மடங்கு அதிகரித்து இருப்பதாக முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். இந்த மினி ஏலத்தில் சிஎஸ்கே அணி நியூசிலாந்து வீரர் டேரல் மிச்சலை 14 கோடி ரூபாய் கொடுத்து எடுத்திருக்கிறது.
இதேபோன்று ரச்சின் ரவீந்திரநாவை ஒரு கோடியே 80 லட்சம் ரூபாய்க்கும் இந்திய ஆல்ரவுண்டர் சார்துல் தாக்கூரை சிஎஸ்கே ஏலத்தில் எடுத்து இருக்கிறது.இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஆகாஷ் சோப்ரா ரச்சின் ரவிந்த்ரா சர்துல் தாக்கூர் போன்ற இரண்டு வீரர்களை சிஎஸ்கே அணி குறைந்த விலையில் எடுத்து விட்டது.
இதன் மூலம் அந்த ஏலத்தில் அவர்கள் எந்த வீரருக்கு வேண்டுமானாலும் எவ்வளவு காசு வேண்டுமானாலும் கொடுக்கலாம் என்ற நிலைக்கு வந்து விட்டார்கள். இதன் காரணமாகத்தான் டேரல் மிச்சலை 14 கோடி ரூபாய் கொடுத்து வாங்கி இருக்கிறார்கள்.
டேரல் மிட்செல் மிகவும் முக்கியமான வீரராக சிஎஸ்கேவுக்கு விளங்குவார். நான் டேரல் மிச்சலுக்கு எட்டிலிருந்து பத்து கோடி ரூபாய் தான் கிடைக்கும் என எதிர்பார்த்தேன். ஆனால் அவருக்கு 14 கோடி ரூபாய் கிடைத்திருக்கிறது. இதன் மூலம் மோயின் அலிக்கு ஒரு நல்ல மாற்று வீரராக டேரல் மிச்சல் விளங்குவார். நடு வரிசையில் உங்களுக்கு அதிரடியான வெளிநாட்டு வீரர் தேவை என்றால் மிச்சல் அதற்கு சரியான ஒரு மாற்றுவீராக திகழ்வார். மோயின் அலி திறமையான வீரராக இருந்தாலும் தற்போது அவர் கொஞ்சம் தடுமாறி வருகிறார்.
கடந்த ஒரு ஆண்டாக அவர் பேட்டிகள் பெரிய அளவில் எதுவும் சாதிக்கவில்லை. இதன் காரணமாக தோனியை அவரை சில ஓவர்களில் தான் பயன்படுத்தினார். இதன் மூலம் கான்வே தொடக்க வீரராகவும் டாரல் மிச்சல் நடு வரிசையிலும் இருப்பார்கள்.
இதேபோன்று தீக்சனா மற்றும் பதிராணா என இரண்டு வீரர்களின் சிஎஸ்கே பிளேயிங் லெவனின் சேர்ப்பார்கள். இல்லையெனில் முஸ்தபிசூர் ரஹ்மானை அணியில் சேர்த்து நல்ல ஒரு வேகப்பந்துவீச்சு படையும் சிஎஸ்கே வால் உருவாக்க முடியும்.
இதைத்தவிர சிஎஸ்கே அணியில் தீபக்சாகர், முகேஷ் சவுத்ரி, தேஷ் பாண்டே, ராஜவர்தன் ஹங்கேர்கர், சிம்ரன்ஜித் சிங் ஆகியோர் இருக்கிறார்கள். தற்போது இதில் ஷர்துல் தாக்கூர் மற்றும் முஸ்தஃபூர் ரஹ்மானும் இணைந்து இருக்கிறார்கள்.
இதன் மூலம் சிஎஸ்கே வின் வேகப்பந்து வீச்சுக்கு பல வீரர்கள் கிடைத்து இருக்கிறார்கள். அவர்கள் சென்னை ஆடுகளத்தை மனதில் வைத்துக்கொண்டு தான் இவ்வளவு வீரர்களை எடுத்து இருக்கிறார்கள். இதேபோன்று சமீர் ரிஸ்வியை எட்டு கோடியே 40 லட்சம் ரூபாய் கொடுத்து சிஎஸ்கே எடுத்தது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது என்றும் ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார்.

