இந்த மாதம் இறுதியில் தொடங்கவுள்ள ஐபிஎல் தொடரில் தனது பழைய அணியான ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் எந்த உணர்வுகளையும் வெளிப்படுத்தாமல் சிறப்பாக விளையாடுவேன் என்று சிஎஸ்கே வீரர் சஞ்சு சாம்சன் தெரிவித்திருக்கிறார்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ரியான் பராக்கை புதிய கேப்டனாக கொண்டு வருவதற்காக சஞ்சு சாம்சனை மெதுவாக ஓரம் கட்டினார்கள். இதைப் புரிந்து கொண்ட அவர் சிஎஸ்கே அணிக்கு வருவதற்கான வாய்ப்பு இருந்த பொழுது உடனே அதை பயன்படுத்திக் கொண்டார். கே கே ஆர் அணியில் கேப்டன் பதவி கிடைக்கும் வாய்ப்பு இருந்தாலும் அந்த அணியில் சேரவில்லை.
தற்போது தனது பழைய அணியான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை ஐபிஎல் தொடரில் எதிர்கொள்ளும் பொழுது தான் எப்படி விளையாடுவேன்? என்றும், அணியில் தனக்கான முக்கியத்துவம் எப்படி இருந்தது? என்றும் பேசியிருக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறும் பொழுது “ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் என்னுடைய காலம் முடிந்து விட்டது என்று உணர்ந்ததால் வெளியேறி வந்தேன். அவர்களுக்கு எதிரான போட்டியில் என்னுடைய உணர்வுகளை நான் கட்டுப்பாட்டில் வைத்திருப்பேன். நிச்சயமாக அவர்களுக்கு எதிரான போட்டியில் நான் சிறப்பாக விளையாடுவேன்” என்று கூறி இருக்கிறார்.

