அநியாயம் அஞ்சு போட்டியில் ஒரு சான்ஸ் கொடுக்கல.. இப்போ டீம்லையே இல்ல.. சிஎஸ்கே வீரர்களுக்காக களம் இறங்கிய முன்னாள் வீரர்

சமீபத்தில் இந்திய மண்ணில் நடைபெற்ற இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கான டி20 தொடரில், இந்திய அணி நான்கு போட்டிகளில் வெற்றி பெற்றுத் தொடரைக் கைப்பற்றியது. இந்திய அணிக்கு சூரியகுமார் யாதவ் கேப்டனாக வழி நடத்தினார். இந்த தொடரில் இடம் பெற்றிருந்த இந்திய வீரர் ஒருவருக்கு ஏன் வாய்ப்பு வழங்கப்படவில்லை என்று ஆகாஷ் சோப்ரா குற்றம் சாட்டியுள்ளார்.

- Advertisement -

உலகக் கோப்பைத் தொடர் அடுத்த வருடம் ஜூன் மாதம் நடைபெற இருக்கும் நிலையில், அணியை மறுசீரமைக்கும் பணியில் இந்திய அணி நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. திலக் வர்மா, ரிங்கு சிங் ஆகியோருக்கு வாய்ப்பளித்து அவர்களும் சிறப்பாக விளையாடிக் கொண்டிருக்கின்றனர்.

- Advertisement -

இந்நிலையில் ஹர்திக் பாண்டியா காயம் காரணமாக 50 ஓவர் உலகக் கோப்பைத் தொடரின் போதே பாதியில் வெளியேறினார். எனவே இந்திய அணியில் ஆல்ரவுண்டருக்கான இடம் என்பது தற்போது வெற்றிடமாகியுள்ளது. உலகக் கோப்பைக்குள் அவரது காயம் குணமாகி அணியில் நுழைவார் என்பது சந்தேகமே.

- Advertisement -

அவருக்கு பதிலாகத்தான் கடந்த சீசனில் சிஎஸ்கே அணியில் சிறப்பாக விளையாடிய சிவம் துபே ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரில் சேர்க்கப்பட்டார். ஆல் ரவுண்டர்க்கான மாற்று வீரராகத்தான் ரசிகர்கள் கருதினர். ஆனால் அவருக்கு ஒரு போட்டியில் கூட விளையாட வாய்ப்பு வழங்கப்படவில்லை.

பின்னர் இவரை எதற்காக இந்திய அணியில் சேர்த்தனர் என்ற கேள்வி ரசிகர்களின் மத்தியில் எழுந்தது. இவருக்கு விளையாட வாய்ப்பு வழங்கப்படாதது குறித்து இந்திய முன்னாள் வீரர்கள் பலரும் குற்றம் சாட்டினர். இந்நிலையில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரிலும் அவர் தேர்வு செய்யப்படாதது அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

- Advertisement -

இந்நிலையில் சிவம் துபேவை தேர்வு செய்யப்படாதது குறித்து ஆகாஷ் சோப்ரா கூறுகையில் : இந்திய அணியின் தேர்வுக் குழு முடிவு ஆச்சரியப்பட வைக்கிறது. ஹர்திக் பாண்டியா இல்லாத நிலையில் சிவம் துபே தான் அணியில் விளையாடி இருக்க வேண்டும். ஆனால் தென்னாபிரிக்க அணிக்கு எதிரான தொடரில் அவரின் பெயர் கூட தேர்வு செய்யப்படவில்லை. இதை அவருக்கு என்ன காரணம் சொல்லி விளக்குவீர்கள் என்று தெரியவில்லை” என்று கூறுகிறார்.

மற்றொரு இந்திய முன்னால் ஜாகிர்கான் ஹர்திக் பாண்டியாவுக்கு மாற்று வீரராக சிவம் தூபேவைத்தான் விளையாட வைத்திருக்க வேண்டும். ஆனால் அவரது வாய்ப்பை இந்திய அணி நிர்வாகம் வீணடித்து விட்டது. ஆஸ்திரேலியா அணி தொடருக்குப் பிறகு வாய்ப்பு அளித்திருக்க வேண்டும். ஆனால் அதையும் நிர்வாகம் செய்ய மறுத்து விட்டது என்று கூறியிருக்கிறார். இந்த சர்ச்சைக்கு பிறகாவது சிவம் துபே மீண்டும் அணியில் இடம் பெறுவாரா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles