இன்னும் ஒரு சிஎஸ்கே வீரர் காயம்.. பேட்டிங் யூனிட்டின் முதுகெலும்பு உடைந்தது.. எப்படி சமாளிக்க போகிறார்கள்?

தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நாதன் எல்லீஸ் காயமடைந்து முழு ஐபிஎல் தொடரிலும் இருந்து வெளியேறியுள்ளார். இதற்கு அடுத்து மகேந்திர சிங் தோனி 6 வாரங்கள் விளையாட மாட்டார் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

இந்த நிலையில் மேலும் ஒரு சூப்பர் ஸ்டார் வீரர் காயம் காரணமாக சில போட்டிகளில் விளையாட மாட்டார் என்கின்ற செய்தி வெளியாகி உள்ளது. இதன் காரணமாக தற்போது சிஎஸ்கே அணி பெரிய சிக்கலில் மாட்டிக் கொண்டுள்ளது.

- Advertisement -

சிஎஸ்கே அணியின் பேட்டிங் யூனிட்டின் மிடில் வரிசையில் முதுகெலும்பாக தென் ஆப்பிரிக்காவின் டிவால்ட் பிரிவிஸ் உள்ளார். தற்போது இவர் பக்கவாட்டு காயத்தில் சிக்கி உள்ளதால் குறைந்தது மூன்று போட்டிகளில் விளையாட மாட்டார் என்கின்ற அதிகாரப்பூர்வ செய்தி வந்துள்ளது. இது சிஎஸ்கே அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக அமைந்துள்ளது.

- Advertisement -

எனவே இவருடைய இடத்திற்கு சர்ப்ராஸ் கான் விளையாட வைக்கப்படுவதற்கு அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளது. இல்லையென்றால் உர்வில் படேல் விளையாட வைக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles