எங்கள சாதாரணமா நினைக்காதீங்க 240 ரன் அடிப்போம்.. அவங்க 2 பேர் மட்டும் வரட்டும் பாருங்க – பிளமிங் கருத்து

தங்கள் அணியால் ஒரு போட்டியில் 240 ரன்கள் எடுக்க முடியும் என சிஎஸ்கே தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளம்மிங் தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -

மேலும் அவர் வெறும் இரண்டு போட்டிகளை மட்டுமே வைத்து சஞ்சு சாம்சனை முடிவு செய்ய முடியாது என்றும் பேசி இருக்கிறார். இத்துடன் தோனி மற்றும் பிரிவிஸ் இருவரும் வரும்பொழுது தங்கள் அணி பெரிய அளவில் வலிமை பெறும் என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து ஸ்டீபன் பிளம்மிங் பேசும்பொழுது “சஞ்சு சாம்சன் ரிதமுக்கு வந்து விட்டால் தனி ஒரு வீரராக போட்டியை வென்று கொடுத்து விடுவார். அவர் இந்த போட்டியில் எட்ஜ் எடுத்து அவுட் ஆகிவிட்டார். இப்படிப்பட்ட வீரரை இரண்டு போட்டியை மட்டும் வைத்து முடிவு செய்ய முடியாது”

- Advertisement -

“எங்கள் அணியில் பினிஷர் தோனி, மிடில் ஆர்டர் பிரிவிஸ் இருவரும் வெளியில் இருக்கிறார்கள். அவர்கள் வரும்பொழுது எங்களால் 240 ரன்கள் எடுக்க முடியும். அந்த சக்தி எங்களுக்குள்தான் இருக்கிறது” என்று கூறி இருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles