எப்படியோ ஒரு வழியா ஜெயிச்சுட்டோம்.. சாம்சனை விட வெற்றிக்கு இதுதான் முக்கிய காரணம் – ருதுராஜ் பேச்சு

நேற்று ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றி குறித்து சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் பேசியிருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து அவர் கூறும் போது “இந்த வெற்றி மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. போட்டியை வென்று இந்த இடத்தில் வந்து பேசுவது மிகவும் நிம்மதியாக இருக்கிறது. நான் ஏற்கனவே சொன்னது போல எங்களுடைய பேட்டிங் வலிமையாகவே உள்ளது. முதலில் மெதுவாக இருந்த ஆடுகளத்தில் கூட நாங்கள் 200 ரன்கள் தாண்டி எடுத்து இருக்கிறோம்”

- Advertisement -

“இந்த போட்டியில் சாம்சன் நேரடியாக டெல்லி பௌலர்களை தாக்கி சிறப்பாக விளையாடினார். ஆரம்பத்தில் ஆடுகளத்தில் பந்து கொஞ்சம் நின்று வந்தாலும் அவரது பேட்டிங் மிகவும் சிறப்பாக இருந்தது. ஆயுஸ் இந்த வயதில் அற்புதமான முறையில் பேட்டிங் செய்தார்”

- Advertisement -

“அதே சமயத்தில் மிடில் ஓவர்களில் இன்று விக்கெட் கைப்பற்றியது தான் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தது. நாங்கள் முன்பு ஏதாவது ஒன்று அல்லது இரண்டு ஓவரில் 25 ரன்னுக்கு மேல் விட்டுக் கொடுத்து விடுவோம். அந்தத் தவறை இந்த போட்டியில் செய்யாதது வெற்றிக்கு காரணம்” என்று கூறியிருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles