நான் மட்டும் அடிச்சிருந்தா 250 ரன் மேட்டரே கிடையாது.. சிஎஸ்கே தோல்விக்கு இதுதான் முக்கிய காரணம் – ருதுராஜ் பேச்சு

இன்று ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி 43 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்த தோல்விக்கான காரணம் என்ன என்பது குறித்து சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் பேசியிருக்கிறார்.

- Advertisement -

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணி 250 ரன்கள் குவித்தது. தொடர்ந்து விளையாடிய சிஎஸ்கே முதல் மூன்று விக்கெட்டுகளை வேகமாக இழந்துவிட்ட போதிலும் இறுதியில் 213 ரன்கள் எடுத்தது.

- Advertisement -

இது குறித்து சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் பேசும்போது ” உண்மையில் எங்களுக்கு இந்த ரன் வந்தது ஆச்சரியமாக இருக்கிறது. சர்பராஸ் கான், பிரசாந்த் வீர், ஜெமி ஓவர்டன் மற்றும் சிவம் துபே சிறப்பான பங்களிப்பை கொடுத்தார்கள். நான் மேல் வரிசையில் ரன்கள் எடுத்திருந்தால் இந்த போட்டியின் முடிவு எங்கள் பக்கம் மாறி இருக்கலாம்”

- Advertisement -

“எங்களுக்கு விராட் கோலி ஆரம்பத்திலேயே கொடுத்த ஒரு கேட்ச் வாய்ப்பை நாங்கள் விட்டு விட்டோம். அதை பயன்படுத்தி இருந்தால் போட்டியில் ஆரம்பத்திலேயே நல்ல வேகம் கிடைத்திருக்கும். இருந்தபோதிலும் நாங்கள் பதிமூன்றாவது ஓவர் வரையில் போட்டியை கையில் வைத்திருந்தோம்” என்று கூறியிருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles