என்னால டீம்ல இந்த ஒரு விஷயத்தை சமாளிக்கவே முடியல கஷ்டமா இருக்கு.. ஆனா என் கையில எதுவும் இல்லை – ருதுராஜ் கருத்து

இன்று லக்னோ அணியை அவர்களது சொந்த மைதானத்தில் எதிர்த்து சிஎஸ்கே அணி விளையாட உள்ளது. இந்த போட்டிக்கு முன்பாக கேப்டன் ருதுராஜ் பேசியிருக்கிறார்.

- Advertisement -

மேலும் சிஎஸ்கே அணியின் முக்கிய ஆல்ரவுண்டர் ஓவர்டன் தொடை பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறியிருக்கிறார். இது அந்த அணிக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.

- Advertisement -

இது குறித்து பேசி உள்ள ருதுராஜ் கூறும்போது ” மஞ்சள் ஜெர்சியை அணிவது எப்போதும் மிகப்பெரிய பாக்கியம். நாங்கள் முதலில் பேட்டிங் செய்ய இருக்கிறோம். இந்த ஆடுகளத்தை பொறுத்தவரையில் நீங்கள் பேட்டிங், பவுலிங் இரண்டிலும் சரியாக இருக்க வேண்டும். 170 முதல் 150 ரன்கள் எடுத்தால் சரியாக இருக்கலாம்”

- Advertisement -

“வீரர்களின் காயத்தால் தொடர்ந்து அணியில் மாற்றத்தை ஏற்படுத்திக் கொண்டே இருக்க வேண்டியதாகவே இருக்கிறது. இது சமாளிப்பதற்கு மிகவும் கடினமாக இருக்கிறது. ஆனால் இந்த விஷயங்கள் நம்முடைய கையில் இல்லை. இந்த போட்டி நாங்கள் முன்பிருந்தே எதிர்பார்த்து வந்த போட்டி” என்று கூறியிருக்கிறார்

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles