மெகா ஏலத்துல சொதப்பி நல்ல டீம் கிடைக்காம பண்ணிட்டாங்க.. இப்ப நம்பிக்கை தவிர வேறு எதுவும் இல்லை – ருதுராஜ் பேட்டி

சிஎஸ்கே அணி நிர்வாகம் ஐபிஎல் மெகா ஏலத்தில் சொதப்பியதை கேப்டன் ருதுராஜ் மிகவும் வெளிப்படையாக ஒப்புக் கொண்டிருக்கிறார். மேலும் மினி ஏலத்தை வைத்து இதை சரி செய்ய முடியாது என்பதையும் மறைமுகமாக கூறியிருக்கிறார்.

- Advertisement -

கடந்த முறை ஐபிஎல் மெகா ஏலத்தில் சிஎஸ்கே அணி நிர்வாகம் சிறந்த வீரர்களை வாங்குவதை தவறவிட்டது. குறிப்பாக இஷான் கிஷான் போன்ற விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன்கள் இருந்தும் வாங்குவதற்கு ஆர்வம் காட்டவில்லை.

- Advertisement -

இதுகுறித்து ருதுராஜ் பேசும் பொழுது “மெகா ஏலத்தில் இருந்து எங்களுக்கு ஒரு நல்ல அணி அமையவில்லை. நான் இது எந்த வீரர்களையும் அவமானப்படுத்துவதற்காக சொல்லவில்லை. எங்கள் அணிக்கு எதிர் பார்த்த ஒரு இணைப்பு கிடைக்காமல் போய்விட்டது”

- Advertisement -

“இதற்குப் பிறகு மினி ஏலத்தை வைத்து நீங்கள் குறைகளை சரி செய்து கொள்ளலாம் என்று நினைப்பீர்கள். அதற்கு கிடைக்கும் வீரர்களை வாங்குவீர்கள். சிறப்பாக செயல்பட முடியும் என்று நம்புவீர்கள். ஆனால் மினி ஏலத்தில் பெரிய அளவில் சிறந்த வீரர்கள் இருக்க மாட்டார்கள்” என்று கூறியிருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles