நான் வேணும்னே மெதுவா பேட்டிங் பண்ணல.. இப்படி ஒரு மாஸ்டர் பிளான் போட்டேன் – ருதுராஜ் தந்த விளக்கம்

நேற்று சிஎஸ்கே அணி பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்த போட்டியில் தான் மெதுவாக 22 பந்தில் 28 ரன்கள் எடுத்ததற்கான காரணத்தை சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கூறியிருக்கிறார்.

- Advertisement -

தற்போது ஐபிஎல் தொடரில் பேட்டிங் மிகவும் ஆக்ரோஷமாக மாறி உள்ளது. இப்படியான நிலையில் ஆடுகளம் சாதகமாக உள்ள போதும் மெதுவாக விளையாடியதுதான் தோல்விக்கு முக்கிய காரணம் என சிஎஸ்கே ரசிகர்கள் ருதுராஜை விமர்சனம் செய்து வருகிறார்கள்.

- Advertisement -

இதுகுறித்து பேசி உள்ள ருதுராஜ் கூறும் பொழுது ” இந்த ஆடுகளத்தில் பந்து கொஞ்சம் கிரிப் ஆகி வந்தது. மேலும் நான் கிரிஸில் கொஞ்ச நேரம் செலவிடலாம் என்று நினைத்தேன். பிறகு அட்டாக் செய்து விளையாடலாம் என்று முடிவு செய்தேன். ஆனால் நான் தவறான நேரத்தில் அவுட் ஆகி விட்டேன்”

- Advertisement -

“இந்த போட்டியில் தோல்வியடைந்து இருந்தாலும் ஆயுஸ் மற்றும் துபே இருவரது பேட்டிங்கும் நம்பிக்கை அளிக்கக் கூடியதாக இருக்கிறது. நாங்கள் அடுத்த போட்டியில் திரும்பி வருவோம்” என்று கூறியிருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles