அடி தூள்.. சிஎஸ்கேவின் மொத்த 25 வீரர்கள் பட்டியல்..ஐபிஎல் 2024 ஏலத்திற்கு பின் அசுர பலமான சென்னை

ஐபிஎல் 2024க்காண மினி ஏலமானது தற்போது வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. இதுவரை இல்லாமல் துபாயில் முதல்முறையாக ஐபிஎல் ஏலம் நடத்தப்பட்டுள்ளது. இதில் பத்து அணிகளும் தங்களுக்கு தேவையான வீரர்களை போட்டி போட்டுக் கொண்டு வாங்கியுள்ளனர்.

- Advertisement -

இதில் சுவாரசியமான விஷயமாக பார்க்கப்படுவது ஐபிஎல் வரலாற்றிலேயே இல்லாத அளவு மிகப்பெரிய விலையை பெற்றிருக்கிறார் மிட்சல் ஸ்டார்க். ஆஸ்திரேலிய வீரரான இவர் சில ஆண்டுகளாக ஐபிஎல் தொடரில் விளையாடாமல் இருந்தார். ஏலத்துக்கு முன்பாகவே இவருக்கு போட்டி இருக்கும் என்று கருதப்பட்டது.

- Advertisement -

ஆனால் அவர் இவ்வளவு பெரிய தொகைக்கு செல்வார் என யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். இவரைக் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, குஜராத் அணியுடன் போட்டி போட்டு இறுதியாக 24.25 கோடிக்கு வாங்கியது. மற்றொரு ஆஸ்திரேலிய வீரரான பேட் கம்மின்ஸை 20.50 கோடிக்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வாங்கியது.

- Advertisement -

இந்த முறை பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சென்னை அணி சொல்லி வைத்தார் போல ரசிகர்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யும் வகையில் வீரர்களை எடுத்துள்ளது. அதில் முதலில் கவனிக்கப்பட வேண்டிய வீரர் டேரில் மிச்சல்.

நியூசிலாந்தைச் சேர்ந்த வீரரான இவர் சமீபத்தில் நடந்த உலகக்கோப்பை அரை இறுதியில் இந்தியாவிற்கு எதிராக சிறப்பாக விளையாடி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். முதலில் சென்னை அணி 12 கோடி வரை அமைதியாக இருந்தது. பின்னர் பஞ்சாப் அணியுடன் போட்டி போட்டு 14 கோடி ரூபாய்க்கு இவரை வாங்கியது. ஆல் ரவுண்டரான இவர் ஸ்பின்னர்க்கு எதிராக சிறப்பாக விளையாடுவார்.

- Advertisement -

நியூசிலாந்து அணியின் மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான ரச்சின் ரவீந்திராவையும் 1.8 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்துள்ளது. இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட இவர் சமீபத்தில் உலகக்கோப்பையில் சிறப்பாக விளையாடி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். மற்றொரு இந்திய ஆல்ரவுண்டரான சர்துல் தாக்கூரை 4 கோடி ரூபாய்க்கு சென்னை அணியே திரும்பவும் வாங்கியுள்ளது.

வங்காளதேச அணி வீரர் முஸ்தபிகுர் ரகுமான் 2 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்துள்ளது. இறுதிக்கட்டத்தில் சிறப்பான பங்களிப்பை அளிக்கக் கூடியவர் இவர். இன்னொரு கவனிக்கப்பட வேண்டிய இளம் வீரர் சமீர் ரிஷ்வி. 20 வயதான இவரை அடிப்படை விலையான 20 லட்சத்தில் ஆரம்பித்து 8.40 கோடி ரூபாய்க்கு தட்டி தூக்கி இருக்கிறது சென்னை அணி. எனவே தற்போது அனைவரின் கவனமும் இவரின் மேல்தான் உள்ளது.

ஹைதராபாத்தைச் சேர்ந்த மற்றொரு இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் அவானிஷ் ஆரவல்லே இவரை 20 லட்சத்துக்கு வாங்கியுள்ளது. எனவே ஏலத்திற்கு பின் சென்னை அணியில் இடம் பிடித்துள்ள முழு வீரர்களின் விபரம்:

எம்எஸ் தோனி, மொயீன் அலி, தீபக் சாஹர், டெவோன் கான்வே, துஷார் தேஷ்பாண்டே, ஷிவம் துபே, ருதுராஜ் கெய்க்வாட், ராஜ்வர்தன் ஹங்கர்கேகர், ரவீந்திர ஜடேஜா, அஜய் மண்டல், முகேஷ் சவுத்ரி, மதீஷா பத்திரனா, அஜிங்க்யா ரஹானே, ஷேக் சிங்யா ரஹானே, ஷேக் சிங் ரஷீத், மிஷார்ட் ரஷீத் சிந்து, பிரசாந்த் சோலங்கி, மகேஷ் தீக்ஷனா, ரச்சின் ரவிந்தரா, டேரி மிச்சல், முஸ்தபிகுர் ரகுமான், ஷார்துல் தாகூர், சமீர் ரிஷ்வி, அவானிஷ் ஆரவில்லே.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles