இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி தற்போது அகமதாபாத்தின் நரேந்திர மோடி மைதானத்தில் நடக்கிறது. இச்சூழலில், இரு அணிகளின் வீரர்கள் தங்கள் கைகளில் வண்ணப் பட்டைகள் அணிந்து வந்தன. இரு அணி வீரர்களும் வண்ண பட்டை அணிந்ததன் காரணம் புரியாமல் அனைவரும் குழம்பினர்.
இந்த குழப்பத்தை சரி செய்ய டாஸ் முடிந்த உடனேயே, “உறுப்புகளை தானம் செய்யுங்கள், உயிர்களைக் காப்பாற்றுங்கள்” என்ற தங்கள் கருத்தை வெளிப்படுத்திய வீடியோவை பிசிசிஐ பதிவேற்றியது. இதில் ரோஹித் சர்மா, விராட் கோலி, ஷுப்மான் கில், முகமது ஷமி மற்றும் பலர் இந்த வீடியோவில் கலந்து கொண்டனர்.
இதில் ஜெய்ஷா தனது x வலைத்தளத்தில், “உடல் உறுப்புகள் தானம் – உயிர்கள் காப்போம்” என்ற விழிப்புணர்வு முயற்சியை தொடங்குகிறோம்.விளையாட்டு என்பது மக்களைத் தூண்டிச் செய்யவைக்கும் சக்தி வாய்ந்ததொன்றாகும். இது மக்களை ஒன்றிணைக்கிறது, விளையாட்டு மைதானத்திற்கு அப்பாற்பட்ட ஒரு நீடித்த தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
இந்த முயற்சியின் மூலம், அனைவரும் உயிர் கொடையாளர்களாக முன்வந்து, வாழ்க்கையின் மிகப்பெரிய பரிசான உயிர்கொடையை வழங்க முன்வருமாறு கேட்டுக்கொள்கிறோம். ஒரு உண்டாண்மை, ஒரு தீர்மானம் – பல உயிர்களை காப்பாற்றக்கூடியது. நாம் ஒன்றிணைந்து மாற்றத்தை உருவாக்குவோம்! என பதிவேற்றம் செய்துள்ளார்.
இந்த முயற்சியில் அனைவரும் இணையுமாறு இந்திய கிரிக்கெட் வீரர்கள் நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கும் வீடியோவையும் பிசிசிஐ பகிர்ந்து கொண்டது.
இந்திய வீரரான விராட் கோலி; “உங்கள் இறுதி சதத்தை அடியுங்கள் – உங்கள் உடல் உறுப்புகள், உங்கள் உயிரை கடந்தும் மற்றவர்களுக்கு புதிய வாழ்வை அளிக்கும். உடல் உறுப்பு தானம் செய்யுங்கள், ஒவ்வொரு உயிரும் விலைமதிப்பற்றது.” என்று பிசிசிஐ வெளியிட்ட வீடியோவில் விராட் கோலி கூறினார்.
சுப்ப்மன் கில்:”உயிரின் கேப்டனாக இருங்கள்! ஒரு கேப்டன் எப்படி தனது அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்கிறாரோ, அதேபோல், நீங்களும் உங்கள் உடல் உறுப்புகளை தானம் செய்து மற்றவர்களுக்கு வாழ்வளிக்க முடியும்” என்று இந்திய துணை கேப்டன் சுப்மான் கில் குறிப்பிட்டார்.
இதில் ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல், ஹர்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, அர்ஷ்தீப் சிங்,வாஷிங்டன் சுந்தர், வருண் சக்கரவர்த்தி மற்றும் ரிஷப் பந்த் ஆகியோரும் இந்த காணொளியில் இடம்பெற்று பிரச்சாரத்தை ஆதரித்தனர்.

