எப்போதுமே நீங்கள் ஒரு ஜோக்கர்தான்.. நான் கொல்கத்தா அணிக்காக இதை செய்தேன் ஆனால் நீங்கள்.. அம்பாத்திராயுடுவை நேரடியாகவே தாக்கிப் பேசிய பீட்டர்சன்

இந்தியாவில் நடைபெற்று வந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதிப்போட்டியோடு முடிவடைந்து இருக்கிறது. இதில் வர்ணனையாளராக பணியாற்றிய அம்பாதி ராயுடுவை சுற்றி சுவாரசியமான நிகழ்வுகளும், விமர்சனங்களும் சென்று கொண்டிருக்கிறது.

- Advertisement -

அம்பாதி ராயுடுவின் பூர்வீகம் ஆந்திர மாநிலமாக இருந்தாலும், அவர் ஐபிஎல் தொடரில் மும்பை மற்றும் சென்னை அணிகளுக்காக விளையாடி தனது ஐபிஎல் வாழ்க்கையை முடித்துக் கொண்டார். இந்த இரண்டு அணிகள் ஐபிஎல் பட்டங்களை வென்ற போதும் இந்த இரண்டு அணியிலும் இருந்து விளையாடி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்த தொடரில் வர்ணனையாளராக பணியாற்றி வரும் அம்பாதி ராயுடு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி குறித்தும் விராட் கோலி குறித்தும் வெளிப்படையாகவே நிறைய கருத்துக்களை பேசி வந்தார். உதாரணமாக சென்னை அணியை லீக் சுற்றில் வீழ்த்தி ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேறிய போது கோப்பையை வென்று விட்டது போல ஆர்சிபி ரசிகர்கள் ஆடுகிறார்கள் வேண்டுமென்றால் சிஎஸ்கேவிடமிருந்து ஒரு கோப்பையை வாங்கி கொடுத்து பெங்களூர் நகரை சுற்றிவரச் சொல்லலாம் என்று வெளிப்படையாகவே பேசினார்.

- Advertisement -

ஆரஞ்சு தொப்பியை வென்றால் மட்டுமே ஐபிஎல் கோப்பையை வென்று விட முடியாது. அணியில் உள்ள அனைவரும் வெற்றிக்காக பாடுபட வேண்டும் என்றும் விராட் கோலியையும் மறைமுகமாக தாக்கி இருந்தார். இந்த சூழ்நிலையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதிப்போட்டியில் சன்ரைசர்ஸ் அணிக்கு ஆதரவாக ஆரஞ்சு நிற கோட் ஒன்றை இறுதிப் போட்டியின் போது அணிந்திருந்தார்.

அப்போது மற்றொரு வர்ணனையாளர் ஆன கெவின் பீட்டர்சன் கொல்கத்தா அணிக்கு ஆதரவாக ஊதா நிற கோட் ஒன்றை அணிந்திருந்தார். இறுதிப்போட்டியில் சன்ரைசர்ஸ் அணியை கொல்கத்தா அணி வீழ்த்தியதை அடுத்து ராயுடு உடனடியாக ஆரஞ்சு நிறக்கோட்-டை கழற்றிவிட்டு ஊதா நிறக்கோட்-டை மாட்டிக் கொண்டார். அதை கெவின் பீட்டர்சன் கவனித்து விட்டார்.

- Advertisement -

உடனே பீட்டர்சன் அம்பாதி ராயுடுவிடம் “நீங்கள் ஒரு ஜோக்கர் எப்பொழுதும் ஜோக்கர். நான் கொல்கத்தா அணியை ஆதரித்த காரணத்தினால் கடைசி வரை ஊதா நிறக் கோட்டை அணிந்திருக்கிறேன்” என்று கூறினார். இதை நகைச்சுவையாக எடுத்துக் கொண்ட ராயுடு “இல்லை இல்லை நான் இரண்டு அணிகளையுமே ஆதரிக்கிறேன்” என்று கூறி அப்போது எழுந்த விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார். இது தற்போது சமூக வலைதளங்களில் ரசிகர்களால் அதிகம் பரப்பப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க:தோனியின் வழியை பின்பற்றும் ஸ்டார்க்.. சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வு பெறப்போவது உறுதி.. அவரே தெரிவித்த கருத்து

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கௌதம் கம்பீரின் ஆலோசனையின் மூலம் சிறப்பாக செயல்பட்டு மூன்றாவது முறையாக கோப்பையை வென்றிருப்பது குறிப்பிடத்தக்கது. அதற்கு முன்னர் வென்ற இரண்டு கோப்பைகளை கௌதம் கம்பீர் கேப்டனாக இருந்த போது கொல்கத்தா அணி வென்றது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles