இப்படிலா எனக்கு யாரும் பண்ண வேணாம்.. அதுல எனக்கு விருப்பமும் இல்லை- டி20 உ. கோ குறித்து டிராவிட் கருத்து

ஒன்பதாவது டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது பரபரப்பான இறுதி கட்டத்தை எட்டி இருக்கிறது. இன்று நடைபெற உள்ள இறுதிப் போட்டி தென்னாபிரிக்கா மற்றும் இந்திய அணிகளுக்கிடையே நடைபெற உள்ளது.

- Advertisement -

கோப்பையை வெல்ல இரண்டு அணிகளுமே போராடும் நிலையில், இந்திய அணியின் பயிற்சியாளரான ராகுல் டிராவிட் உலகக் கோப்பை குறித்து சில முக்கிய கருத்துகளை கூறி இருக்கிறார்.

- Advertisement -

தென்னாபிரிக்க அணி கிரிக்கெட் விளையாட துவங்கிய காலகட்டத்தில் இருந்து வலுவான அணியாக திகழ்ந்து வருகிறது. அந்த அணியில் பல ஜாம்பவான் வீரர்கள் விளையாடியிருந்தாலும் இதுவரை ஒரு ஐசிசி கோப்பையை கூட தென்னாப்பிரிக்கா வென்றதில்லை. தற்போது அந்த வரலாற்றை மாற்றியமைக்க மார்க்ரம் தலைமையிலான அணி தற்போது டி20 உலக கோப்பையில் சிறப்பான பங்களிப்பை வெளிப்படுத்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளது.

- Advertisement -

32 ஆண்டு கால வரலாற்றை மாற்றியமைக்கும் விதமாக தென்னாப்பிரிக்க அணி தனது முழு முயற்சியும் வெளிப்படுத்தும். அதேபோல டி20 உலக கோப்பையை 2007 ஆம் ஆண்டு தோனிக்குப் பிறகு இதுவரை ஒரு முறை கூட வெல்லாத இந்திய அணி ரோகித் சர்மா தலைமையில் தற்போது இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. மேலும் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோருக்கு இதுவே கடைசி உலக கோப்பையாக இருப்பதால் அவர்களுக்காகவும் அதுமட்டுமல்லாமல் இந்திய அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகப் போகும் ராகுல் டிராவிட்டிற்காகவும் இந்த உலகக் கோப்பையை இந்திய அணி கைப்பற்ற வேண்டும் என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆக்கி வருகின்றனர்.

இதை அறிந்த ராகுல் டிராவிட் உலகக் கோப்பை குறித்து தனது கருத்துக்களை கூறியிருக்கிறார். இது குறித்து டிராவிட் விரிவாக கூறும்பொழுது “இந்தியாவின் மிக உயர மலையான எவரெஸ்ட் சிகரத்தில் ஏன் ஏற வேண்டும் என்று கேட்டதற்கு ‘எவரெஸ்ட் சிகரம் என்ற ஒரு விஷயம் இருக்கிறது நான் அதில் ஏறப்போகிறேன் அவ்வளவுதான் என்று ஒருவர் கூறுவதாக சொல்வார்கள்’. அதேபோலத்தான் உலகக் கோப்பை என்கிற ஒரு விஷயம் உள்ளது, அதை நான் வெல்ல வேண்டும் என்று விரும்புகிறேன் அவ்வளவு தான்.

- Advertisement -

இவருக்காக செய்ய வேண்டும் என்கிற விஷயத்தில் எனக்கு உடன்பாடோ விருப்பமோ இல்லை. வேறு ஒருவருக்காக ஒரு வேலையை செய்வது அது நமது நம்பிக்கைக்கு எதிராக இருக்கும்” என்று ராகுல் டிராவிட் கூறி இருக்கிறார். சமூக வலைதளங்களில் இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டுக்காக # டோல்ட் ஃபார் டிராவிட் என்று வலைதளங்களில் ட்ரெண்ட் ஆகி வரும் நிலையில் தனது கருத்தை தெரிவித்து இருக்கிறார்.

இதையும் படிங்க:நீங்க நினைச்ச மாதிரி விளையாட இது ஒன்னும் இந்தியா பிட்ச் இல்ல.. அவரைப் பாருங்க எப்படி இருக்கார்னு.. கோலியை விமர்சிக்கும் ரசீத் லத்தீப்

பார்படாசில் நடைபெற உள்ள இந்தப் போட்டி இரவு 8 மணிக்கு நடைபெற உள்ளது. கோப்பையை வெல்ல இரண்டு அணிகளுக்குமே சம வாய்ப்பு இருப்பதால் இந்தப் போட்டியில் பரபரப்புக்கு ரசிகர்களுக்கு பஞ்சம் இருக்காது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles