இந்திய அணியில் புறக்கணிக்கப்படும் சர்ஃபராஸ் கான்.. நேரடியாக ஆதரவு கூறிய கிறிஸ் கெய்ல்.. இப்படி இளம் வீரரை சோதிக்காதீங்க

இந்திய அணியின் நட்சத்திர வீரர் சர்ஃபராஸ் கானுக்கு தொடர்ந்து வாய்ப்பு மறுக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக அறிமுகமான சர்ஃபராஸ் கான் பலரின் கவனத்தையும் ஈர்த்தார். ஆனால் நியூசிலாந்து டெஸ்ட் தொடருக்கு பின் ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் செய்த இந்திய அணியில் சர்ஃபராஸ் கானுக்கு ஒரு போட்டியில் கூட வாய்ப்பு அளிக்கப்படவில்லை.

- Advertisement -

சர்ஃபராஸ் கான் புறக்கணிப்பு

அதேபோல் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் சர்ஃபராஸ் கான் சேர்க்கப்படவே இல்லை. இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிராக இந்திய ஏ அணி ஆடிய போது, சிறப்பாக ஆடிய போதும் சர்ஃபராஸ் கான் புறக்கணிக்கப்பட்டார். தற்போது சர்ஃபராஸ் கான் ஃபிட்னஸிலும் கவனம் செலுத்தி உடல் எடையை குறைத்திருக்கிறார். ஆனாலும் அவருக்கு வாய்ப்பு அளிக்கப்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. 

- Advertisement -

இதுதொடர்பாக கிறிஸ் கெய்ல் கேள்வி எழுப்பி இருக்கிறார். கிறிஸ் கெய்ல் பேசும் போது, டெஸ்ட் அணியில் கட்டாயமாக சர்ஃபராஸ் கான் இருக்க வேண்டும். குறைந்தபட்சம் இந்திய அணியிலாவது இடம் கொடுக்க வேண்டும். சொந்த மண்ணில் சதம் விளாசிய போதும், அவருக்கு இடம் கொடுக்கப்படவில்லை. 2 நாட்களுக்கு முன்பாக பார்த்த போது கூட, சர்ஃபராஸ் கான் உடை எடையை குறைத்திருந்தார்.

- Advertisement -

கிறிஸ் கெய்ல் கருத்து

அவரின் உடல் எடையில் எந்த குறையும் இல்லை. சர்ஃபராஸ் கான் நன்றாக இருக்கிறார். உள்நாட்டு கிரிக்கெட்டில் ரன்களை தொடர்ந்து குவித்து வருகிறார். முதல்தர கிரிக்கெட்டில் முச்சதம் விளாசி இருக்கிறார். அவருக்கு வாய்ப்பு அளிக்கப்படாதது நிச்சயம் சோகமான விஷயம். அவருக்கு எதிராகவே, அவரின் சாதனைகளையும் பயன்படுத்த கூடாது. 

அந்த இளம் வீரர் நிச்சயமாக இந்திய அணியில் இடம்பிடிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். சர்ஃபராஸ் கான் நம்பர் 4 அல்லது நம்பர் 5 பேட்டிங் வரிசையில் ஆடி வருகிறார். இந்திய அணியில் அந்த இடத்தில் சுப்மன் கில் மற்றும் ரிஷப் பண்ட் ஆகிய இருவரும் விளையாடி வருவதால், சர்ஃபராஸ் கானுக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை என்று பார்க்கப்படுகிறது.

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles