2025 IPL தொடருக்கான CSK அணியின் விவரம்.சமீபத்தில் நடர்ந்து முடிந்த 2025 ஆண்டுக்கான IPL ஏலத்தில் CSK அணி தனது பழைய வீரர்களான அஷ்வின், சாம் குரான் மற்றும் முகேஷ் போன்ற வீரர்களை வாங்கி தங்கள் அணியை பலப்படுத்தி உள்ளது.
இந்த வீரர்கள் மட்டுமின்றி போன சீசன் மற்றும் 2023 CSK அணி வெற்றிகளுக்கும் கோப்பை வெல்ல முக்கிய காரமாக இருந்த டேவன் கான்வாய்யும் 6.25 கோடிக்கு வாங்கி உள்ளது CSK அணி. சக நியூசிலாந்து வீரர் மற்றும் CSK வீரரான ரச்சின் ரவிந்திராவையும் RTM மூலம் 4 கோடிக்கு வாங்கி உள்ளது.
ஜாக்பாட் அடுத்த CSK
அணிக்கு No.3 வீரர் தேவை என்ற நிலையில் சென்ற ஆண்டு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு விளையாடிய ராகுல் திருப்பாத்தியை எடுத்துள்ளது. அதுமட்டுமின்றி, சென்ற சீசனில் குஜராத் அணி வெற்றிக்கு பெரிதும் உதவிய சுழல் பந்துவீச்சாளர் நூர் அகமதுவையும் தட்டி தூக்கியுள்ளது CSK.
ஆஸ்திரேலியா அணியின் முக்கிய இறுதி நேர பந்துவீச்சாளர்கஅளில் ஒருவர் நாதன் எலிஸ். தனது இறுதி நேர பந்துவீச்சில் ரன்களை கட்டுப்படுத்துவதில் வல்லமை படைத்த இவர் அதற்கு பல யுக்திகளை கையாள்வது வழக்கம். பந்துவீச்சு மட்டுமின்றி பேட்டிங்கில் கூட அதிரடியாக ஆட கூடிய இவரை CSK அணி வெறும் 2 கோடிக்கு எடுத்து ஜாக்பாட் அடித்துள்ளது.
அனுபவம் & திறமையின் மீது நம்பிக்கை
இந்திய அணிக்கு விளையாடிய திறமையும் அனுபவமும் கொண்ட தீபக் ஹூடவை 1.7 கோடிக்கும் சென்ற சீசனில் சிறப்பாக விளையாடிய பந்துவீச்சாளர் கலீல் அகமதுவை 4.8 கோடிக்கும் எடுத்துள்ளது CSK.
இந்த ஏலத்தில் தங்கள் அணிக்கு தேவையான அனைத்து வீரர்களையும் சிறப்பாக எடுத்துள்ளது CSK அணி என்றே கூறலாம். குறிப்பாக சென்னை மைதானம் சூழல் பந்துவீச்சில் சாதாகம் என்பதால் நூர் அகமது இம்பாக்ட் பிளேயராக விளையாட அதிக வாய்ப்புள்ளது. சென்னைக்கு வெளியே அவர் இடத்தில் வேகப்பந்து வீச்சாளர் தேவை எனினும் தங்கள் அணியில் சிறந்த பந்துவீச்சாளர்களை எடுத்துள்ளது CSK.
அணியின் விவரம்
ருத்துராஜ் கெய்க்வாட் (C), எம்எஸ் தோனி, டெவோன் கான்வே, ராகுல் திரிபாதி, ஷேக் ரஷீத், வன்ஷ் பேடி, ஆண்ட்ரே சித்தார்த், ரச்சின் ரவீந்திரா, ரவிச்சந்திரன் அஸ்வின், விஜய் சங்கர், சாம் கர்ரன், அன்ஷுல் கம்போஜ், தீபக் ஹூடா, ஜேமி ஓவர்டன், ராமகிருஷ்ண கோஷ், ரவீந்திர ஜடேஜா, சிவம் துபே, கலீல் அகமது, நூர் அகமது, முகேஷ் சவுத்ரி, குர்ஜப்னீத் சிங், நாதன் எல்லிஸ், கமலேஷ் நாகர்கோடி, ஷ்ரேயாஸ் கோபால், மதீஷ பத்திரனா.
சிறந்த 11 பேர்
ருத்துராஜ் கெய்க்வாட் (C), டெவோன் கான்வே, ராகுல் திரிபாதி, தீபக் ஹூடா, ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, சாம் கர்ரன், எம்எஸ் தோனி (WK), ரவி அஷ்வின், மதீஷா பத்திரனா, கலீல் அகமது (நூர் அகமது: இம்பேக்ட் வீரர்)

