கேட்சை விட்டால் உட்கார்ந்து அழுகவா முடியும்.. பாவம் ஜெய்ஸ்வால்.. இந்திய அணியில் புதிதாக ஆடுகிறார்.. பும்ரா ஆறுதல்

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 471 ரன்கள் சேர்த்த நிலையில், இங்கிலாந்து அணி 465 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டாகியது. இதன்பின் களமிறங்கிய இந்திய அணி 3வது நாள் ஆட்டம் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 90 ரன்கள் எடுத்து களத்தில் உள்ளது.

- Advertisement -

3வது நாள் ஆட்டத்தின் ஹீரோவாக பும்ரா மாறி இருக்கிறார். 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்திய பும்ரா, SENA நாடுகளில் 150 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் ஆசிய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். அதேபோல் 14வது முறையாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள பும்ராவுக்கு இந்திய ரசிகர்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

- Advertisement -

பும்ரா பேட்டி

இதன்பின் பும்ரா பேசும் போது, நான் விளையாட தொடங்கிய நாள் முதலே பலரும் இன்னும் சில ஆண்டுகள்தான் விளையாடுவேன் என்று கூறி வருகின்றனர். 8 மாதங்கள் மட்டுமே விளையாடுவேன், 10 ஆண்டுகளுக்கு மேல் விளையாட முடியாது, ஐபிஎல் தொடரில் 12 முதல் 13 சீசன்களில் மட்டும் விளையாடுவேன் என்றெல்லாம் பேசுகிறார்கள். ஒவ்வொரு முறை காயம் அடையும் போது, நான் அவ்வளவு தான் என்கிறார்கள்.

- Advertisement -

அவர்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளட்டும். நான் எனது பணியை செய்து கொண்டே இருக்கப் போகிறேன். ஒவ்வொர்யு 4 மாதங்களுக்கு ஒருமுறையும் இப்படியான பேச்சுகளை கேட்க முடிகிறது. கடவுள் எவ்வளவு காலம் என்னை ஆசீர்வதித்துள்ளாரோ, அதுவரை விளையாடுவேன். அதன்பின் மொத்த பொறுப்பையும் கடவுளிடம் விட்டுவிடுவேன். அதுவரை இந்திய கிரிக்கெட்டை அடுத்த இடத்திற்கு நகர்த்துவேன்.

அழுக முடியுமா?

என்னை பற்றி விமர்சிப்பது, கருத்துகளை சொல்வதை என்னால் தடுக்க முடியாது. நான் யாரிடமும் என்னை பற்றி எழுதாதீர்கள் என்று சொல்லப் போவதில்லை. எனது பெயர் தலைப்பு செய்தியில் இருந்தால், வாசகர்கள் கிடைக்கிறார்கள். அதனால் அவர்களின் செய்திகளை பற்றி கவலை கொள்ளப் போவதில்லை. இந்த போட்டியை பொறுத்தவரை பேட்டிங் செய்வதற்கு பிட்ச் நன்றாக இருக்கிறது. வானிலை காரணமாக புதிய பந்து நன்றாக ஸ்விங்காகும்.

- Advertisement -

டெஸ்ட் கிரிக்கெட்டில் பெரிய ஸ்கோரை இலக்காக நிர்ணயித்தால், ஒரு சாதகம் பவுலர்களுக்கு கிடைக்கும். அதனால் இந்திய அணி பெரிய இலக்கை நிர்ணயிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். அதேபோல் கேட்ச் டிராப்களை பொறுத்தவரை யாரையும் குறை சொல்ல முடியாது. பலரும் இந்திய அணிக்கு புதிதாக இருக்கிறார்கள். கேட்சை கோட்டைவிடுவதால், அங்கு அமர்ந்து அழுகவா முடியும்.. அடுத்த வேலை செய்வதே என் பணி என்று தெரிவித்துள்ளார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles