இந்திய அணி கடந்த ஞாயிறு நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 உலக கோப்பை இறுதி போட்டியில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இந்த கொண்டாட்டத்தின் போது இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா தனது காதலியுடன் இணைந்து செய்த சம்பவம் ஒன்று தற்போது வழக்கு பதிவு செய்யும் அளவுக்கு சென்று உள்ளது.
இந்த இறுதி போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதும் இந்திய வீரர்கள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டார்கள். ஹர்திக் பாண்டியா எல்லா நேரத்திலும் தனது காதலியுடன் இணைந்து காணப்பட்டார். மேலும் கடைசிவரையில் அவருடைய முதுகில் ஒரு தேசியக் கொடியை போர்த்தியபடி இருந்தார்.
இந்த நிலையில் ஒரு கட்டத்தில் மேடையில் அவருடைய காதலி படுத்திருந்தார். அப்போது ஹர்திக் பாண்டியாவும் தேசியக்கொடியை போர்த்தியபடி அவருடைய அருகில் படுத்தார். தற்பொழுது இந்த சம்பவம் தேசியக்கொடியை அவமதித்ததாக வழக்குப்பதிவு செய்யும் அளவுக்கு போய் உள்ளது.
குஜராத்தைச் சேர்ந்த வாஜித்கான் என்ற வழக்கறிஞர் இது தேசியக் கொடியை அவமதிப்பு செய்வதாக இருப்பதாக கூறி சிவாஜி நகர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்திருக்கிறார். வழக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு இருப்பதால் இது ஹர்திக் பாண்டியாவுக்கு நெருக்கடியை உண்டாக்கி உள்ளது.

