என்னை டீம விட்டு தூக்குறியா.. என் மேல செம கோவத்துல அக்சர் இருந்தார்.. மன்னிப்பு கேட்டேன் – சூரியகுமார் பேச்சு

நடந்து முடிந்த டி20 உலக கோப்பையில் இரண்டாவது சுற்றில் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் அக்சர் படேலை விளையாட வைக்காததால் அவர் தன் மீது கோபமாக இருந்ததாகவும், அதற்காகத்தான் அவரிடம் மன்னிப்பு கேட்டதாகவும் கேப்டன் சூர்யா குமார் யாதவ் கூறியிருக்கிறார்.

- Advertisement -

இந்த உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி இரண்டாவது சுற்றில் முதல் போட்டியில் தென் ஆப்ரிக்க அணிக்கு எதிராக குஜராத் அகமதாபாத் மைதானத்தில் படுதோல்வியடைந்தது. இந்த போட்டியில் அக்சர் படேல் நீக்கப்பட்டு வாஷிங்டன் சுந்தர் சேர்க்கப்பட்டார்.

- Advertisement -

இது குறித்து சூரியகுமார் யாதவ் பேசும்பொழுது “அந்த போட்டியில் நாங்கள் அணிக்காக அப்படி ஒரு முடிவை எடுக்க வேண்டியதாக இருந்தது. ஆனால் என்னுடைய முடிவில் என் மீது அக்சர் படேல் கோபமாக இருந்தார். அவர் கோபமாக இருப்பதுதான் சரியானது. ஏனென்றால் அவர் மிகவும் அனுபவம் வாய்ந்த அணியை வழிநடத்தக் கூடியவர். பிறகு நான் இதற்காக அவரிடம் மன்னிப்பு கேட்டேன். அது ஒரு கடினமான உரையாடலாக அடுத்த நாள் அமைந்தது”

- Advertisement -

“மேலும் எங்களுக்கு தென் ஆப்பிரிக்க போட்டியில் ஏற்பட்ட தோல்வி பெரிய கண்களை திறந்தது. அதற்கு அடுத்து நாங்கள் திரும்பி வர முடியாத அளவுக்கு எல்லா போட்டியும் நாக் அவுட் போட்டியாக மாறியது. நாங்கள் அதிலிருந்து பாடம் கற்றுக் கொண்டோம்” என்று கூறியிருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles