நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி மிகவும் மோசமான ஆட்டத்தை வெளிக்காட்டி பல்வேறு குற்றச்சாட்டுகளைப் பெற்றுள்ளது. இது குறித்து ஆட்டம் முடிந்த பிறகு பேசிய கேப்டன் ரோஹித் ஷர்மா, தன் மேல் தான் தவறு என ஒப்புக் கொண்டுள்ளார்.
மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் போட்டி பெங்களூருவில் நேற்று ஆரம்பித்தது. ஆனால் முதல் நாள் முழுவதுமாக மழையால் பாதிக்கப்பட்டது. இன்று டாஸ் வென்ற கேப்டன் ரோஹித் ஷர்மா பேட்டிங் செய்ய முடிவு செய்தார்.
நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் ஹென்றி, ஒரூக்கே இருவரையும் சமாளிக்க முடியாமல் இந்திய வீரர்கள் ஒருவர் ஒருவராக நடையைக் கட்டினர். கோலி, சர்பராஸ், ராகுல், ஜடேஜா, அஷ்வின் ஆகிய 5 வீரர்களும் டக் அவுட் ஆகி பெரிய ஏமாற்றம் அளித்தனர். இறுதியில் இந்திய அணி 46 ரன்களுக்கு ஆள் அவுட் ஆகி பல்வேறு மோசமான சாதனைகளை தன் வசப்படுத்தியுள்ளது.
சொந்த மண்ணில் இந்தியாவின் குறைந்தபட்ச ஸ்கோர் இதுவே. கிரிக்கெட் வர்னையாகர்கள் மற்றும் வல்லுனர்கள் என குற்றச்சாட்டுகள் அடுக்கிய வண்ணம் குவிந்துள்ளது. இரண்டாம் நாள் ஆட்டம் முடிவடைந்த பிறகு கேப்டன் ரோஹித் ஷர்மா செய்தியாளர்கள் சந்திப்பில் இது குறித்துப் பேசினார்.
நியூசிலாந்து பந்துவீச்சாளர்கள் ஆதிக்கத்துடன் பந்துவீசி இந்திய அணியை நிலைக் குலையச் செய்ததற்கு மிக முக்கியக் காரணம் வானிலை. பிட்சும், மேகமூட்டத்துடன் இருந்த வானிலை பந்து வீச்சாளர்களுக்கு நல்ல ஸ்விங்கைக் கொடுத்தது. மேலும் பிட்ச் டாஸ் வென்ற ரோஹித் ஷர்மா இதனைச் செய்யாமல் பேட்டிங் செய்தது தான் ஆச்சர்யத்தை உண்டாக்கியுள்ளது.
இது பற்றி ரோஹித் கூறியதாவது, “தவறு என் மேல் தான். டாசில் நான் பிட்ச்சை சரியாக கணிக்கவில்லை. பிட்சில் புல் இல்லாததால் இது பேட்டிங்க்கு சாதகமான ஒன்று என நான் எடுத்துக் கொண்டேன். மேலும் இன்று நாங்கள் தேர்ந்தெடுத்து ஆடிய ஷாட்களும் சரியாக அமையாததால் 46 ரன்களுக்கு ஆல் அவுட் ஆக முக்கியக் காரணம். இன்று நாங்கள் ஒன்று திட்டமிட அது தவறாக முடிந்துவிட்டது. இன்று ஒரு மோசமான நாள். “
தொடர்ந்து ஆடிய நியூசிலாந்து அணி 50 ஓவரில் 180/3 என்ற வலுவான நிலையில் உள்ளது. சியர்ப்பாக ஆடிய கான்வே 91 ரன்கள் சேர்த்தார். களத்தில் ரச்சின் ரவீந்திரா & டாரில் மிட்செல் நாளை ஆட்டத்தை தொடர்வர். பும்ரா & சிராஜ் போன்ற குதிரைகளை வைத்து இந்தியா முதலில் பந்துவீசி இருந்தால் போட்டி ரோஹித் & கோவுக்கு சாதகமாக அமைந்திருக்க வாய்ப்பிருந்து இருக்கும்.

