வேகப்பந்து வீச்சு மீது ஆர்வமே எனக்கு இதைப் பார்த்துதான் வந்தது.. எனது யார்க்கர் பந்து வீச்சின் ரகசியமும் இதுதான்.. பும்ரா பிரத்யேக பேட்டி

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இன்னும் சில தினங்களில் தொடங்க உள்ளது. இதற்காக இந்திய அணியினர் மிக தீவிரமாக பயிற்சி பெற்று வருகின்றனர்.

- Advertisement -

கடந்த டி20 உலக கோப்பையை தவறவிட்ட இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் இந்த முறை கோப்பையை எப்படியாவது வென்று விட வேண்டும் என்ற தீவிரத்தில் இருக்கிறார்.

- Advertisement -

கடந்த 2022ஆம் ஆண்டு ஜூன் மாதம் இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரின் போது காயமடைந்து வெளியேறினார். அதற்குப் பிறகு பும்ரா டி20 உலக கோப்பை, 50 ஓவர் உலகக் கோப்பை மற்றும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் உள்ளிட்ட முக்கியத் தொடர்களை தவறவிட்டார். பின்னர் காயத்திலிருந்து குணம் அடைந்து ஐபிஎல் தொடரில் பங்கு பெற்று விளையாடினார்.

- Advertisement -

இதனால் சர்வதேசத் தொடர்களை விட பணம் கொழிக்கும் ஐபிஎல் போட்டிகள் பும்ராவிற்க்கு அதிக ஆர்வம் தருகிறது என்ற விமர்சனங்களும் இருந்தன. ஆனால் அவையெல்லாம் காதில் வாங்கிக் கொள்ளாத பும்ரா கடந்த நவம்பர் மாதத்தில் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பையின் போது சிறப்பாக செயல்பட்டு இந்திய அணியை இறுதிப்போட்டி வரை அழைத்துச் சென்றார். கடைசி போட்டியில் அடைந்த தோல்வி மட்டுமே இந்திய அணியால் உலக கோப்பையை வெல்ல முடியாமல் போனது.

அதன் பிறகு இந்த ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டு 20 விக்கெட்டுகள் கைப்பற்றி இருக்கிறார். தனது வேகப்பந்து வீச்சு ஆர்வம் குறித்தும், யார்க்கர் பந்துகளை வீசும் ரகசியம் குறித்தும் ஐசிசி இணையத்தில் பும்ரா பேட்டியளித்து இருக்கிறார். இது குறித்து அவர் விரிவாக கூறும் பொழுது
“காயத்திலிருந்து நான் மீண்டு வந்தது முதலே எனது ஆட்டத்தில் மட்டுமே கவனம் செலுத்தி முடிந்த அளவு சிறப்பாக விளையாட முயற்சி செய்கிறேன். ஏனென்றால் சில விஷயங்கள் நான் நினைத்தவாறு இருக்காது.

- Advertisement -

அதனால் அது குறித்து நான் பெரிதாக கவலை கொள்வதில்லை. எனவே இதனால் நான் விளையாட்டை புரிந்து கொண்டு விளையாட துவங்கியிருக்கிறேன். மேலும் இறுதி முடிவை பற்றி கவலைப்படாமல் எனது செயல் முறையில் மட்டுமே நான் அதிக கவனம் செலுத்துகிறேன். அந்த வகையில் நீங்கள் விளையாடும் போதுதான் விளையாட்டை ரசித்து அனுபவித்து முழுமையாக விளையாட முடியும். நான் வளரும் பருவத்தில் டென்னிஸ் மற்றும் ரப்பர் பந்துகளில் அதிக கிரிக்கெட் விளையாடியுள்ளேன்.

இதையும் படிங்க:இன்னும் 3 ஆண்டுகள் என்னால் கிரிக்கெட் விளையாட முடியும்.. ஆனால் நான் ஓய்வு தெரிவிக்க காரணமே இதுதான்.. கூறுகிறார் தினேஷ் கார்த்திக்

அதனால்தானோ என்னவோ என்று தெரியவில்லை என்னால் துல்லியமாக யார்க்கர் பந்துகளை வீச முடிகிறது. சிறுவனாக இருந்த போது நான் விக்கெட்டுகளை எடுக்க இதுதான் ஒரே வழி என்று நினைத்து வீசுவேன். தொலைக்காட்சிகளில் கிரிக்கெட் பார்க்க துவங்கிய போதே நான் வேகப் பந்துவீச்சின் ரசிகன். இப்போதும் டென்னிஸ் பந்துகள் மூலம் நான் தொடர்ந்து பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறேன். இதுவே எனது யார்க்கர் பந்துகளின் ரகசியமாக கூட இருக்கலாம்” என்று கூறி இருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles