நான் எடுத்த டெசிஷன் கரெக்ட்.. நாங்க தோக்க காரணம் இதுதான்.. நல்லதே கிடையாது.. பங்களாதேஷ் கேப்டன் பேட்டி.!!

இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் பங்களாதேஷ் அணிக்கு எதிராக இரண்டாவது டி20 போட்டியிலும் வெற்றி பெற்ற இந்தியா 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி இருக்கிறது. இந்த இரண்டு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி வருகின்ற 12ஆம் தேதி ஹைதராபாத்தில் நடைபெற உள்ளது.

- Advertisement -

இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகளைக் கொண்ட டி20 தொடர் கடந்த ஆறாம் தேதி தொடங்கியது. குவாலியர் நகரில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து இரண்டாவது டி20 போட்டி இன்று டெல்லியில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பங்களாதேஷ் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

- Advertisement -

இதனைத் தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 221 ரன்கள் எடுத்தது. இந்திய அணியின் இளம் வீரர் நிதிஷ்குமார் ரெட்டி சிறப்பாக விளையாடி 33 பந்துகளில் 74 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இவருடன் அதிரடியாக விளையாடிய ரிங்கு சிங் 29 பந்துகளில் 53 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இதனைத் தொடர்ந்து 222 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய பங்களாதேஷ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழந்து 135 ரன்கள் மட்டும் எடுத்து தோல்வியை தழுவியது.

- Advertisement -

இந்த வெற்றியின் மூலம் டி20 தொடரை இந்திய அணி கைப்பற்றி இருக்கிறது. இந்திய அணியின் பந்துவீச்சில் வருண் சக்கரவர்த்தி மற்றும் நிதீஷ் குமார் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் சிறப்பாக செயல்பட்ட நிதிஷ்குமார் இந்தப் போட்டியில் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில் தோல்விக்கு பின் பேசிய பங்களாதேஷ் அணியின் கேப்டன் நஜ்முல் ஹுசைன் சாந்தோ தங்கள் அணி முதல் போட்டியில் செய்த அதே தவறுகளை மீண்டும் செய்ததாக தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக விரிவாக பேசியிருக்கும் அவர் ” முதல் போட்டியில் செய்த தவறுகளையே இந்த போட்டியிலும் திரும்ப செய்தது தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்திருக்கிறது. வீரர்கள் இதனை மாற்றிக் கொள்ள வேண்டும். தவறுகளை மீண்டும் மீண்டும் செய்வது அணிக்கு உகந்ததல்ல. ஒரு போட்டியில் தோல்வி அடைந்தால் அந்த தோல்வியில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு வெற்றிக்கு திரும்ப வேண்டும்” என கூறி இருக்கிறார்.

- Advertisement -

மேலும் தொடர்ந்து பேசிய அவர் ” டாஸ் வெற்றி பெற்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது சரியான முடிவு தான். எங்கள் அணி முதல் 6 அல்லது 7 ஓவர்களுக்கு சிறப்பாக பந்து வீசியது. மேலும் விரைவாக 3 விக்கெட்டுகளும் கைப்பற்றினோம். முதல் 7 ஓவர்களுக்கு பிறகு இந்திய அணி சிறப்பாக பேட்டிங் விளையாடியது. நாங்கள் எங்களது திட்டங்களை சரியான முறையில் செயல்படுத்தவில்லை. அதுவே தோல்விக்கு காரணமாக அமைந்தது” என கூறி இருக்கிறார்.

அணியில் உள்ள ஒவ்வொரு வீரர்களும் பொறுப்புடன் செயல்பட வேண்டும். பேட்டிங்கில் செய்த தவறுகளை திருத்திக் கொள்ள வேண்டும். அணியின் ஒவ்வொரு பேட்ஸ்மேனும் பொறுப்புடன் விளையாட வேண்டும். மேலும் வீரர்கள் அனைவரும் தங்களது திறமையின் மீது நம்பிக்கை வைத்து விளையாட வேண்டும். பந்துவீச்சாளர்கள் சிறப்பான தொடக்கத்தை அமைத்துக் கொடுத்தனர். எனினும் ஆட்டத்தின் இடைப்பட்ட ஓவர்களில் எங்களால் விக்கெட் வீழ்த்த முடியவில்லை. இது இந்திய வீரர்கள் ரன் குவிக்க வாய்ப்பாக அமைந்தது” என தெரிவித்திருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles