இங்கிலாந்து அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி விளையாடி வருகிறது. முதல் இன்னிங்சில் இரு அணிகளும் தலா 387 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டாகியது. இந்த நிலையில் 4வது நாள் ஆட்டத்தை இங்கிலாந்து அணி தொடங்கியது. இதில் முதல் செஷனிலேயே அதிரடியாக ரன்களை குவிக்க முயன்று டக்கெட், போப், கிராலி மற்றும் ஹாரி ப்ரூக் ஆகியோர் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினர்.
சிராஜ் கொடுத்த வலி
இதனால் இங்கிலாந்து அணி 87 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அப்போது ஜோ ரூட் – பென் ஸ்டோக்ஸ் கூட்டணி 5வது விக்கெட்டுக்கு இணைந்தது. இருவருமே அதிரடி ஆட்டத்தை கைவிட்டு நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். உணவு இடைவேளைக்கு பின் மீண்டும் பும்ரா மற்றும் சிராஜ் அட்டாக் செய்த்னர். அப்போது 29வது ஓவரை வீச சிராஜ் வந்தார்.
அந்த ஓவரின் கடைசி பந்தை சிராஜ் கொஞ்சம் ஸ்விங் செய்து வீச, அதனை பேட்டால் எதிர்கொள்ள முடியாமல் பென் ஸ்டோக்ஸ் தவறவிட்டார். அந்த பந்து நேராக பென் ஸ்டோக்ஸ்-ன் ஆண் குறியில் அடித்து சென்றது. ஒரு நிமிடம் வலியில் துடித்த பென் ஸ்டோக்ஸ் அப்படியே க்ரீஸிலேயே படுத்து கொண்டார். இதனை பார்த்த இந்திய அணி வீரர்கள் சிரிக்க தொடங்கினார்கள்.
வாஷிங்டன் சுந்தர் அதிரடி
இங்கிலாந்து அணியின் ஜோ ரூட்டும் சிரிக்க தொடங்க, ஒட்டுமொத்த மைதானமும் கலகலப்பாக மாறியது. இதனால் சில நிமிடங்கள் பென் ஸ்டோக்ஸ் நின்று கொண்டிருந்தார். தொடர்ந்து நிதானமாக ஆடிய பென் ஸ்டோக்ஸ் 96 பந்துகளில் 33 ரன்கள் எடுத்து வெளியேறினார். இதனால் ஆட்டம் ஒட்டுமொத்தமாக இந்திய அணி பக்கம் திரும்பி இருக்கிறது.
அதற்கு முக்கிய காரணமாக வாஷிங்டன் சுந்தர் அமைந்துள்ளார். ஏனென்றால் இங்கிலாந்து அணியின் அபாயகரமான பேட்ஸ்மேன்களான ஜோ ரூட், ஜேமி ஸ்மித் மற்றும் பென் ஸ்டோக்ஸ் ஆகியோரின் 3 விக்கெட்டுகளையும் வாஷிங்டன் சுந்தர் வீழ்த்தி அசத்தியுள்ளார். இதனால் இந்திய அணியின் கைகள் ஓங்கி இருக்கிறது.

