இந்திய அணியின் அடுத்த பயிற்சியாளர் யார்?. ஜூன் மாதத்தோடு முடியும் டிராவிட்டின் பதவிக்காலம்.. வெளிநாட்டு வீரர்களுக்கும் வாய்ப்பு.. விளக்கம் கூறும் ஜெய்ஷா

இந்திய கிரிக்கெட்டின் தலைமை பயிற்சியாளராக தற்போது ராகுல் டிராவிட் செயல்பட்டு வரும் நிலையில் அவரது பதவிக்காலம் வருகிற ஜூன் மாதத்தோடு முடிவடைகிறது.

- Advertisement -

இந்த நிலையில் அடுத்த மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளதால், டி20 உலக கோப்பை வரை பயிற்சியாளராக செயல்பட ராகுல் டிராவிட் ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

- Advertisement -

எனவே டி20 உலக கோப்பையுடன் அவர் பயிற்சியாளர் பதவியில் இருந்து விலக இருக்கிறார். அதற்குப் பிறகு புதிய பயிற்சியாளருக்கான தேடுதல் பணி நடைபெறும் என்று மும்பையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா கூறியிருக்கிறார்.

- Advertisement -

இதற்கான விளம்பரத்தை இந்திய கிரிக்கெட் வாரியம் விரைவில் வெளியிட உள்ளது. ராகுல் டிராவிட்டின் பயிற்சி காலம் ஜூன் மாதத்தோடு முடிவடைய உள்ளதால் அவர் விரும்பினால் மீண்டும் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இதே போல இந்திய அணிக்கு பயிற்சியாளராக பல வெளிநாட்டு வீரர்களும் இருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 2011ம் ஆண்டு இந்திய அணிக்கு தென்னாப்பிரிக்காவை சேர்ந்த கேரி கிர்ஸ்டன் பயிற்சியாளராக இருந்தார்.

அவரது காலத்தில்தான் 2011ஆம் ஆண்டு இந்திய அணி உலக கோப்பையை வென்று வரலாற்று சாதனை படைத்தது. அதற்குப் பிறகு இந்திய அணிக்கு டங்கன் ப்ளட்சர் பயிற்சியாளராக பொறுப்பேற்றார். அவரது பதவிக்காலத்திற்கு பின்னர் அணில் கும்ப்ளே மற்றும் ரவி சாஸ்திரி போன்ற இந்திய வீரர்களும் பயிற்சியாளராக இருந்துள்ளனர். கடைசியாக 2021ஆம் ஆண்டு டி20 உலக கோப்பைக்கு பின்னர் ராகுல் டிராவிட் இந்திய அணியின் பயிற்சியாளராக பொறுப்பேற்றார். இந்த நிலையில் இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு வெளிநாட்டு வீரர்களும் வர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

- Advertisement -

இவரது பயிற்சியில் 50 ஓவர் உலகக்கோப்பை இறுதிப்போட்டி, மற்றும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி, டி20 உலக கோப்பை அரையிறுதி போட்டி மேலும் ஆசிய கோப்பையையும் வென்றது. எனவே இந்திய அணிக்கு யார் எடுத்த பயிற்சியாளராக வரப்போகிறார் என்பது குறித்து ஜெயிஷாவிடம் கேட்கப்பட்ட போது அதற்கு பதில் அளித்த அவர்
“அது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை. பிசிசிஐ ஒரு சர்வதேச அமைப்பு போல செயல்படுகிறது. பயிற்சியாளரை பிசிசிஐக்கு ஆலோசனை வழங்கும் குழுதான் தேர்வு செய்யும்.

இதையும் படிங்க:ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறன்.. எங்கள் தரத்திற்கு ஏற்ப நாங்கள் விளையாடவில்லை.. தோல்விக்கு பின்னர் பேசிய பஞ்சாப் கேப்டன் ஷாம் கரண்

மேலும் ஒரு நாள், டி20 மற்றும் டெஸ்ட் தொடருக்கு தனித்தனியான பயிற்சியாளர் நியமிக்கப்படுவது குறித்து கேட்கிறீர்கள். விராட் கோலி, ரோகித் சர்மா மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் 3 வகையான கிரிக்கெட்ளையும் விளையாடி வருவதால் தனித்தனியான பயிற்சியாளரை நியமிக்க வேண்டிய அவசியம் இந்தியாவில் இருக்காது” என்று கூறி இருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles