இந்தியாவின் அடுத்த தொடரில் அதிரடி மாற்றம்.. புது அட்டவணையை அறிவித்த பிசிசிஐ.. சென்னை போட்டியிலும் மாற்றம்

இந்திய அணி சர்வதேச கிரிக்கெட்டில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது. டெஸ்ட் போட்டிகள், ஒரு நாள் கிரிக்கெட் போட்டி மற்றும் டி20 என அனைத்து வடிவ கிரிக்கெட்டிலும் இந்திய அணி சர்வதேச அணிகளுக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கிறது. 2024 ஆம் வருடம் வெஸ்ட் இண்டீஸ் மட்டும் அமெரிக்காவில் நடைபெற்ற டி20 உலக கோப்பை போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது.

- Advertisement -

இதனைத் தொடர்ந்து இந்திய அணியின் 2024/25 ஆண்டுகளுக்கான கிரிக்கெட் போட்டிகள் தொடங்கியது. உலகக்கோப்பை வெற்றிக்குப் பிறகு இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி ஜிம்பாப்வே நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்து 5 டி20 போட்டிகளில் விளையாடியது. இதனைத் தொடர்ந்து இலங்கை சுற்றுப்பயணம் செய்த இந்தியா 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகளைக் கொண்ட தொடரில் விளையாடியது.

- Advertisement -

இந்தப் போட்டிகளுக்குப் பிறகு இந்திய அணிக்கு நீண்ட ஓய்வு கிடைத்திருக்கிறது. இந்த ஓய்விற்குப் பிறகு இந்திய அணி பங்களாதேஷ் அணியுடன் டெஸ்ட் மற்றும் டி20 தொடர்களில் விளையாட இருக்கிறது. அதனைத் தொடர்ந்து இந்திய அணி அடுத்தடுத்த தொடர்களில் விளையாட இருக்கிறது. இந்தப் போட்டிகளுக்கான அட்டவணை மற்றும் செய்திகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

செப்டம்பர் மாதம் முதல் ஜனவரி 2025 வரை இந்திய அணி 10 டெஸ்ட் போட்டிகளில் விளையாட இருக்கிறது. மேலும் இந்த காலகட்டத்தில் இந்தியா 7 டி20 போட்டிகளிலும் விளையாடுகிறது. செப்டம்பர் மாதம் இந்தியாவிற்கு வரும் பங்களாதேஷ் அணியுடன் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட இருக்கிறது. இதனைத் தொடர்ந்து அக்டோபர் மாதம் பங்களாதேஷ் அணியுடன் 3 டி20 போட்டிகளிலும் பங்கேற்க உள்ளது. பங்களாதேஷ் அணியை தொடர்ந்து நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.

3 போட்டிகளைக் கொண்ட இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் வர இருக்கின்ற அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நடைபெற உள்ளது. இதன் பிறகு தென்னாப்பிரிக்கா செல்லும் இந்தியா அங்கு 4 போட்டிகளைக் கொண்ட டி20 தொடரில் பங்கேற்கிறது. இதனைத் தொடர்ந்து ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் செய்து 5 டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட தொடரில் விளையாடுகிறது. ஆஸ்திரேலிய தொடருக்குப் பிறகு இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து ஒரு நாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாட இருக்கிறது.

- Advertisement -

இந்நிலையில் இந்தியா -பங்களாதேஷ் மற்றும் இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கிடையே நடைபெறும் டி20 போட்டிகளில் மாற்றம் செய்யப்பட்டு இருப்பதாக பிசிசிஐ அறிவித்திருக்கிறது. டெஸ்ட் போட்டிகளை தொடர்ந்து இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகள் பங்கேற்கும் டி20 போட்டி தொடரின் முதல் போட்டி அக்டோபர் 6 ஆம் தேதி தரம்சாலாவில் நடைபெறுவதாக இருந்தது. இந்தப் போட்டியை மத்திய பிரதேச மாநிலத்தின் குவாலியர் நகருக்கு மாற்றி இருப்பதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

தரம்சாலா மைதானத்தில் வீரர்களின் டிரெஸ்ஸிங் ரூமை நவீனப்படுத்த பணிகள் நடைபெற்று வருவதால் முதல் டி20 போட்டியை குவாலியர் நகரில் அமைந்திருக்கும் புதிய மைதானத்திற்கு மாற்றி இருப்பதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. குவாலியர் நகரில் பழைய கிரிக்கெட் மைதானம் மாற்றப்பட்டு ஸ்ரீமந் மாதவராவ் சிந்தியா என்ற புதிய சர்வதேச கிரிக்கெட் மைதானம் கட்டப்பட்டுள்ளது. இங்கு வைத்து இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி நடைபெற உள்ளது.

இதன் மூலம் 14 வருடங்களுக்குப் பிறகு குவாலியர் நகரில் சர்வதேச கிரிக்கெட் போட்டி நடைபெற இருக்கிறது. இந்த நகரில் 2010 ஆம் வருடம் கடைசியாக நடைபெற்ற சர்வதேச ஒரு நாள் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக சச்சின் டெண்டுல்கர் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளின் வரலாற்றில் முதல்முறையாக 200 ரன்கள் எடுத்து உலக சாதனை படைத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டி தொடரிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக பிசிசிஐ அறிவித்திருக்கிறது. இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான முதல் டி20 போட்டி 2025 ஆம் வருடம் ஜனவரி 22ஆம் தேதி சென்னையில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து இரண்டாவது போட்டி ஜனவரி 25 இல் கொல்கத்தாவில் நடைபெறும் என அட்டவணை வெளியிடப்பட்டிருந்தது.

தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக ஜனவரி 22ஆம் தேதி நடைபெறும் முதல் டி20 போட்டி கொல்கத்தாவிற்கு மாற்றப்பட்டு இருக்கிறது. மேலும் ஜனவரி 25ஆம் தேதி நடைபெற இருந்த இரண்டாவது டி20 போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு மாற்றப்பட்டிருக்கிறது. ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினம் நடைபெற இருப்பதால் பாதுகாப்பு காரணங்களுக்காக கொல்கத்தாவில் நடைபெற இருந்த போட்டியை வேறு தேதிக்கு மாற்றுமாறு கொல்கத்தா காவல்துறையினர் மேற்குவங்க கிரிக்கெட் சங்கத்திடம் கோரிக்கை வைத்திருந்தனர். இதனைத் தொடர்ந்து மேற்குவங்க கிரிக்கெட் சங்கம் கேட்டுக் கொண்டதன் பெயரில் பிசிசிஐ இந்த மாற்றங்களை செய்திருக்கிறது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles