“பாகிஸ்தான் ஜெயிக்க கூடாதுன்னு பிசிசிஐ இதை பண்றாங்க” – முஹம்மது ஹஃபீஸ் குற்றச்சாட்டு.!

இந்தியாவில் தற்போது நடைபெற்று வரும் உலகக்கோப்பை போட்டி தொடரில் பாகிஸ்தான் அணி 5 போட்டிகளில் விளையாட இரண்டு வெற்றி மற்றும் மூன்று தோல்விகளுடன் ஐந்தாவது இடத்தில் இருக்கிறது. திங்கள் கிழமை நடைபெற்ற போட்டியில் அந்த அணி ஆப்கானிஸ்தான் அணி இடம் தோல்வி அடைந்தது. இந்நிலையில் போட்டிக்கு முன்பாக பாகிஸ்தான் அணியின் உன்னால் வீரர் முகமது ஹபீஸ் ஐசிசி மற்றும் பிசிசிஐ குறித்து சர்ச்சைக்குரிய விமர்சனங்களை பதிவு செய்திருக்கிறார்.

- Advertisement -

2023 ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டிகள் இந்தியாவில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து பாகிஸ்தான் அணி பங்கு பெற்று விளையாடுமா என்ற சந்தேகம் நிலவி வந்தது. மேலும் ஆசிய கோப்பை போட்டிகளை இந்தியா பாகிஸ்தானில் சென்று விளையாட மறுப்பு தெரிவித்து வந்ததால் பாகிஸ்தான் அணி உலக கோப்பையை புறக்கணிக்கும் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாகிகள் முன்பு பகிரங்கமாக அறிவித்ததும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஹைபிரிட் முறையில் ஆசிய கோப்பை போட்டிகள் நடைபெற்றது தொடர்ந்து பாகிஸ்தான் அணி இந்தியாவிற்கு வந்து உலகக் கோப்பை விளையாடுவது உறுதியானது.

- Advertisement -

இந்த உலகக் கோப்பையின் அட இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் நான்கு அணிகளில் ஒரு அணியாக ஆரம்பம் முதலே கிரிக்கெட் விமர்சகர்களால் பாகிஸ்தான் அணியும் கணிக்கப்பட்டு இருந்தது. அந்த அணியும் உலகக்கோப்பை தொடரை வெற்றியுடனே தொடங்கியது. ஹைதராபாத்தில் நடைபெற்ற முதல் இரண்டு போட்டிகளில் நெதர்லாந்து மற்றும் இலங்கை அணியை வீழ்த்தி வெற்றியுடன் தொடங்கியது. மேலும் இலங்கை அணிக்கு எதிராக உலக கோப்பையில் அதிக ரன்கள் இரண்டாவது பேட்டிங்கின் போது சேஸ் செய்து வெற்றி பெற்ற அணி என்ற சாதனையையும் படைத்தது.

- Advertisement -

ஆனால் அக்டோபர் 14ஆம் தேதி இந்திய அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் ஏழு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. அதனைத் தொடர்ந்து நடைபெற்ற ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டியிலும் 62 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவி அதிர்ச்சி அளித்தது. இந்நிலையில் திங்கள்கிழமை அந்த அணி ஆப்கானிஸ்தானை எதிர்த்து சென்னையில் வைத்து விளையாட இருந்தது. அந்தப் போட்டிக்கு முன்பாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் ஆல் ரவுண்டர் முகமது ஹஃபீஸ் இந்திய கிரிக்கெட் வாரியம் மற்றும் ஐசிசி போட்டி நடைபெறும் ஆண்டு காலங்களை எதிரணி நேருக்கு சாதகமாக வைத்துக் கொடுத்து பாகிஸ்தான் அணிக்கு எதிராக சதி செய்வதாக குற்றம் சாட்டி இருந்தார்.

இது தொடர்பாக பேசியிருந்த அவர் ” பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் போது பயன்படுத்தப்பட்ட சுடர்புந்திவீழ்ச்சிக்கு சாதகமான ஆடுகளம் பயன்படுத்தப்பட இருக்கிறது. இது ஆப்கானிஸ்தான் சிலர் வந்து வீச்சாளர்களுக்கு சாதகமான விஷயம். ஐசிசி மற்றும் பிசிசிஐ பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடும் அணிகளுக்கு சாதகமாக ஆடுகளங்களை பயன்படுத்துகிறது” என குற்றஞ்சாட்டு பதிவு செய்திருந்தார். இது கிரிக்கெட் வட்டாரங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியது.

- Advertisement -

எனினும் திங்கள்கிழமை நடைபெற்ற பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டியில் பயன்படுத்தப்பட்ட ஆடுகளம் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாகவே இருந்தது. அந்தப் போட்டியில் சுழற் பந்துவீச்சாளர்களுக்கு ஆடுகளம் சிறிது ஒத்துழைத்தாலும் பேட்ஸ்மேன்களால் ரன்கள் குவிக்க முடிந்தது. இந்தப் போட்டியில் முதலில் ஆடிய பாகிஸ்தான் 282 ரன்கள் எடுத்தது. அந்த இலக்கை துரத்திய ஆடிய ஆப்கானிஸ்தான் இரண்டு விக்கெட்டுகள் மட்டுமே எடுத்து மிகப் பெரிய வெற்றியை பெற்றது. மேலும் பாகிஸ்தான் அணிக்கு எதிராக தங்களது முதல் வெற்றியும் பதிவு செய்தது.

தற்போது முகமது ஹபீஸ் கருத்து குறித்து ரசிகர்கள் தங்களது கண்டனங்களையும் விமர்சனங்களையும் பதிவு செய்து வருகின்றனர். தரமான ஆடுகளத்திலும் பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சு மற்றும் பீல்டிங் சரியாக அமையாதது அந்த அணியின் தோல்விக்கு காரணம் என தங்களது கருத்தை பதிவு செய்து வருகின்றனர். தங்கள் அணியில் இருக்கும் தவறுகளை களையாமல் மற்றவர்களை குறை சொல்வது ஒரு போதும் அந்த அணிக்கு நல்லதை செய்யாது என முன்னாள் வீரர்களும் தங்களது கருத்தை பதிவு செய்துள்ளனர். பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரமும் பாகிஸ்தான் வீரர்களின் பிட்னஸ் குறித்து தனது கண்டனத்தை பதிவு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles