புது புது விதிமுறைகள் மூலம் உலக கிரிக்கெட்டை அதிர செய்யும் BCCI – ஷமியின் முயற்சியால் பௌலர்களுக்கு அடித்த ஜாக்பாட்

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ), இன்று இந்தியன் பிரீமியர் லீக்கின் 2025ல் வரவிருக்கும் சீசனில் பந்தில் உமிழ்நீரைப் பயன்படுத்துவதற்கு மற்றும் புதிய விதி முறைகளை அறிமுக படுத்துவது தொடர்பாக அனைத்து அணிகளின் கேப்டன்கள் தலைமையிடம் ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது.

- Advertisement -

கோவிட் பெரும் தொற்றுக்கு பின் பந்தில் உமிழ் நீரை பயன்படுத்த அனுமதிக்கப்படவில்லை. நாங்கள் உமிழ்நீரைப் பயன்படுத்த அனுமதிக்கப்பட வேண்டும் என்று நாங்கள் தொடர்ந்து வேண்டுகோள் விடுக்கிறோம், இதனால் விளையாட்டில் ரிவர்ஸ் ஸ்விங்கை மீண்டும் கொண்டு வர முடியும், அது சுவாரஸ்யமாகிறது,” என்று அவர் இந்த மாத தொடக்கத்தில் துபாயில் நடந்த இந்தியாவின் சாம்பியன்ஸ் டிராபியின் போது கூறினார். இந்த கருத்தை மூத்த வேகப்பந்து வீச்சாளர்கள் வெர்னான் பிலாண்டர் மற்றும் டிம் சவுதி ஆகியோரும் கூறி இருந்தனர்.

- Advertisement -

இன்று மும்பையில் நடந்த கேப்டன்கள் கூட்டத்தில் உமிழ்நீர் மீதான தடையை ரத்து செய்ய பிசிசிஐ முடிவு செய்தது. இந்த முடிவின் மூலம், தொற்றுநோய்க்குப் பிறகு உமிழ்நீர் பயன்பாட்டை மீண்டும் அறிமுகப்படுத்திய முதல் பெரிய கிரிக்கெட் நிகழ்வாக ஐபிஎல் ஆனது. மேலும்

- Advertisement -

ஐபிஎல் போட்டிகளில் ஒரு முக்கிய காரணியான பனி, ஒவ்வொரு போட்டிகளிளும் முடிவுகளை நிர்ணயம் செய்கிறது. இதை அகற்றுவதற்கான புதிய விதியையும் இந்திய வாரியம் அறிமுகப்படுத்த உள்ளது. இந்த அறிவிப்பானது ஒரு ஆட்டத்தின் இரண்டாவது இன்னிங்ஸில் இரண்டாவது பந்தைப் பயன்படுத்த அனுமதிக்கிறது. இரண்டாவது இன்னிங்ஸில் 11வது ஓவருக்கு பிறகு இரண்டாவது பந்து அறிமுகப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்படுள்ளது.

இதன் மூலம் அணிக்கு டாஸ் வெல்லும் அணிக்கு இயற்கையின் மூலம் ஏற்படும் சாதகத்தை தவிர்க்க முடியும். இதானால் போட்டி இன்னும் சுவாரசியமாகவே பவுடர்களுக்கும் சாதகமான சூழ்நிலை உருவாகும்.

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles