தல தோனியை தக்க வைக்கும் திட்டத்தில் மண்ணை அள்ளிப் போட்ட பிசிசிஐ.. 2025 ஐ.பி.எலில் இத்தனை வீரர்களை மட்டுமே தக்க வைக்க முடியும்.. ஆர்.டி.எம் கார்டு ரத்து !

2025 ஐ.பி.எல் தொடருக்கு மெகா ஏலம் திட்டமிட்டுள்ளது ரசிகர்கள் மத்தியில் பெரிய ஆர்வத்தைக் கூட்டியுள்ளது. வருகின்ற நவம்பர் மாதம் கடைசி வாரம் இந்த மெகா ஏலம் நடைபெறவுள்ளதாக தகவல்கள் வந்தன. அதன்படி அனைத்து அணிகளும் நவம்பர் 15ம் தேதிக்குள் தக்க வைக்கும் வீரர்கள் பட்டியலைக் கொடுக்க வேண்டும்.

- Advertisement -

இன்னும் ஓரிரு நாளில் எத்தனை வீரர்களை தக்கவைத்துக் கொள்ளலாம் என பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவுக்கும். ஆனால் இன்று மாலையே தகுந்த வட்டாரங்கள் மூலம் அந்த செய்தி வெளியாகிவிட்டது. அதாவது இம்முறை அனைத்து அணிகளும் அதிகபட்சமாக 5 வீரர்களை தக்க வைத்துக் கொள்ளலாம். இதில் 3 இந்தியர்களும், 2 வெளிநாட்டு வீரர்களும் அடங்குவர்.

- Advertisement -

சில மாதங்களுக்கு முன்னர் இது குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் சில அணி நிர்வாகிகள் 8 வீரர்களை தக்க வைக்க அனுமதிக் கேட்டனர். மறுபக்கம் மற்ற சில அணிகள் ஒரே ஒரு வீரர் மட்டும் போதும் என அவரவர் விருப்பத்துக்கு கோரிக்கை விடுத்தனர். அனைத்து அணிகளுக்கும் பொதுவாக இருக்குமாறு விருப்பமுள்ள அணிகள் 5 வீரர்கள் வரை தக்க வைத்துக் கொள்ளலாம் என்ற முடிவுக்கு பிசிசிஐ வந்துள்ளது.

- Advertisement -

மேலும் சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் முன்வைத்த கோரிக்கையும் மறுக்கப்பட்டுள்ளது. எம்.எஸ்.தோனி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விலகி 5 ஆண்டுகள் சகியுள்ளதால், அவரை அன்காப்டு வீரராக கருதி நேரடியாக தக்க வைத்துக் கொள்ளும் பழைய சலுகையை மீண்டும் கொண்டுவருமாறு கேட்டனர். ஆனால் இதற்கு பிசிசிஐ ஒப்புதல் வழங்கவில்லை.

இதன் படி நேரடியாக 5 வீரர்கள் அணியில் தங்குவார்கள். ஆர்.டி.எம் கார்டு முற்றிலும் நீக்கப்பட்டுள்ளது. மேலும் ஒவ்வொரு அணிக்கும் 20 கோடிகள் பர்ஸ் தொகை கூட்டப்படுகிறது. தற்போது அனைவரது கவனமும் எந்தெந்த அணிகள் எந்தெந்த வீரர்களை தக்க வைப்பார்கள், யாரை விடுவார்கள் என்பதில் தான் உள்ளது.

- Advertisement -

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மீண்டும் தல தோனி காணப்படுவாரா எனும் பெரிய கேள்விக்கான பதில் காத்திருப்பில் கிடக்கிறது. புதிய கேப்டன் ருத்துராஜ் கெய்க்வாட் தலைமையில் சென்னை அணி சிறப்பாக செய்தாலும் பிளேஆப்ஸ் சுற்றுக்குத் தகுதி பெறும் வாய்ப்பை கடைசிக் கட்டத்தில் இழந்தது. கடந்த ஆண்டே, விண்டேஜ் லுக்கில் அதிரடியாக பினிஷிங் செய்த தல தோனிக்கு நல்ல ஃபேர்வெல் அமையும் என ரசிகர்கள் எதிர்பார்த்து ஏமாந்தனர்.

இம்முறை மீண்டும் வருவாரா அல்லவா என்பதைப் பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும். இதற்கு மிக முக்கியமாக தோனியின் முட்டி வலி எந்த அளவு முன்னேற்றத்தைக் கண்டுள்ளது என்பதைக் காண வேண்டும். சென்ற வருடமே வலியைக் பொறுத்துக் கொண்டு ரசிகர்களுக்கு ஒரு பரிசாக இருக்கட்டும் எனக் கூறி தான் தோனி களமிறங்கினார். அதனால் இம்முறை தல தோனியை மீண்டும் சேப்பாக்கில் காண்பது சற்று கடினமே எனத் தோன்றுகிறது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles