அடி தூள்.. எலக்ட்ரா ஸ்டம்புகள் அறிமுகம்.. நடக்கப் போகும் அதிரடி மாற்றங்கள்.. நடுவர்களின் வேலை காலி.. முழு விவரம்.!

மாற்றம் ஒன்றே மாறாதது என்ற பழமொழிக்கு ஏற்றார் போல், கிரிக்கெட் தொடங்கியது முதல், பல மாற்றங்களை கடந்து இன்னும் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

- Advertisement -

டெஸ்ட் போட்டியில் பெரிய மாற்றங்கள் நிகழவில்லை என்றாலும், ஒருநாள் போட்டி 60 ஓவர்களில் இருந்து 50 ஓவர் ஆக மாற்றப்பட்டுள்ளது. கிரிக்கெட் மேலும் மாற்றமடைந்து, டி20, டி10 மற்றும் 100 என பல வடிவங்களாக மாறி பயணித்து வருகிறது.

- Advertisement -

கிரிக்கெட் போட்டியின் வடிவங்களில் ஏற்பட்ட மாற்றங்களைப் போலவே அதில் பயன்படுத்தும் பொருட்களிலும், மாற்றங்கள் காலத்திற்கு தகுந்தாற்போல் ஏற்பட்டுக் கொண்டே வருகிறது. பேட்டின் அளவு, பந்தின் எடையும் காலத்திற்கு ஏற்றார் போல் மாறி உள்ளது. டெஸ்ட் போட்டிகள் வளர்ச்சிக்காக, இரவு நேர டெஸ்ட் போட்டி விளையாடும் போது சிகப்பு நிற பந்தில் இருந்து பிங்க் நிற பந்து பயன்படுத்தப்பட்டு வருகிறது.

- Advertisement -

ஒருநாள் போட்டிகளில், ஆரம்ப காலத்தில் சிவப்பு பந்து மற்றும் வெள்ளை நிற ஆடைகளை பயன்படுத்தினர். காலப்போக்கில் வெள்ளை நிற பந்து மற்றும் அணிக்கு ஏற்றார் போல் ஆடைகளின் வண்ணங்களை மாற்றிக்கொண்டனர். டெஸ்ட் போட்டிகளில் ஆடைகளின் பின்னால் நம்பர்களை பயன்படுத்துவது என கிரிக்கெட் போட்டி காலத்திற்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொண்டிருக்கிறது.

மூன்றாவது நடுவர்களை பயன்படுத்துவது, டிஆர்எஸ் முறை, மற்றும் ஒருநாள் போட்டிகளில் ஒரு ஓவரில் இரண்டு பவுன்சர்கள் வீசுவது என பல விதிமுறைகளும் காலத்திற்கு ஏற்ப மாற்றப்பட்டுள்ளது. கிரிக்கெட்டில் பயன்படும் பொருட்களில் ஸ்டெம்பும் முக்கியமானது. ஸ்டெம்பும் காலத்திற்கு ஏற்ப தன்னை அழகு படுத்திக் கொண்டே வருகிறது.

- Advertisement -

ஸ்டெப்புகளில் விளம்பரங்கள் பயன்படுத்துவது தொடங்கி, ஸ்டெம்ப் லைட் பயன்படுத்துவது வரை மாறி உள்ளது. ஸ்டெம்பின் லைட் பயன்படுத்துவதன் மூலம், ஸ்டெம்பிங் மற்றும் ரன் அவுட் முடிவுகள் மிகத் துல்லியமாக கண்டறியப்பட்டன.

கிரிக்கெட்டில் புதிய மாற்றமாக, எலக்ட்ரா ஸ்டம்புகள் தற்போது பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பிக் பாஷ் லீக்கில், பெண்களுக்கான பிபிஎல் 2023ல் முதன்முறையாக பயன்படுத்தப்பட்டது. தற்போது ஆண்களுக்கான பிபிஎல் 2023லும் எலக்ட்ரா ஸ்டம்புகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

எலக்ட்ரா ஸ்டம்புகள், பல வண்ணங்களை வெளிப்படுத்தக்கூடிய தன்மை கொண்டது. ஆடுகளத்தில் ஏற்படும் நிகழ்வு ஏற்ப வண்ணங்களை வெளிப்படுத்தும். பவுண்டரி, சிக்ஸர், விக்கெட், ஓவரின் இடையே, மற்றும் நோபாலுக்கென தனித்தனி வண்ணங்களை வெளிப்படுத்தி ரசிகர்களை மகிழ்ச்சி படுத்தும்.

பிபிஎல் 2023ல் எலக்ட்ரா ஸ்டம்புகள் ஐந்து விதமாக செயல்படுகின்றன. விக்கெட்கள் வீழ்த்தப்படும் போது, சிவப்பு நிறமாக தோன்றி தீ போல் காட்சியளிக்கிறது. பேட்ஸ்மேன்கள் பவுண்டரி அடிக்கும் போது, எலக்ட்ரா ஸ்டம்புகள் தன்னில் உள்ள அனைத்து வண்ணங்களையும் மாறி மாறி மின்னல் வேகத்தில் வெளிப்படுத்தும். அதேபோல சிக்ஸர்கள் பறக்கும் போது, அனைத்து வண்ணங்களையும் மேல் நோக்கி வான வேடிக்கையாய் வெளிப்படுத்தும். பந்துவீச்சாளர்கள் நோபல் வீசும் போது, வெள்ளை மற்றும் சிவப்பு நிறம் கலந்து எலக்ட்ரா ஸ்டம்புகளில் ஒளிருடன் ஓடும். இதன் இறுதி வெளிப்பாடாக,
ஒவ்வொரு ஓவருகளுக்கு இடையே, நீலம் மற்றும் ஊதா நிறம், மாறி மாறி துடிக்கும்.

இங்கிலாந்தின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன், புதிய எலக்ட்ரா ஸ்டம்புகளை காட்சிப்படுத்தியும், அதன் வண்ணங்களின் வெளிப்பாடுகளையும் விளக்கினார்.

ரசிகர்களை தன் அழகிய வண்ணங்களால் கவரும் எலக்ட்ரா ஸ்டம்புகள் வீடியோ இணைக்கப்பட்டுள்ளது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles